முகப்புஃபோட்டோ கேலரிஉலகம்Hiroshima Day 2021: ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சின் 76வது நினைவு தினம் இன்று
Hiroshima Day 2021: ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சின் 76வது நினைவு தினம் இன்று
By : சலன்ராஜ் | Updated at : 06 Aug 2021 09:12 PM (IST)
ஹிரோசிமா, நாகசாக்கி
1/8
1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்ந்தன.
2/8
அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக கூறி அமெரிக்கா இந்த படுகொலையை நியாயப்படுத்தியது.
3/8
குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள்
4/8
இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும்
5/8
இந்த அணுகுண்டு வீச்சால் பாதிப்படைந்தவர்கள் பெரும்பாலானோர் பொது மக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது
6/8
ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” (little boy)
7/8
மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (Fat man) என்ற குறுப்பெயர் சூட்டினர்
8/8
இரண்டாம் உலகப் போருக்குப் பின், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது. அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது. அணு ஆயுதங்கள் சப்பானுக்குள் வர இசையாது என்ற அணு ஆயுத விலக்கு பற்றிய மூன்று தத்துவங்களை ஜப்பான் தனக்கென்று வகுத்துக்கொண்டது.