மேலும் அறிய
Erode Election : ஈரோட்டில் பரபரப்பு பிரச்சாரம் செய்த முதல்வர்..கடலென திரண்ட மக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்!
Erode Election: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈடோட்டில் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஈரோட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
1/11

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பரப்புரை ஓய்கிறது
2/11

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார்.
3/11

இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குறைதீர் மனுக்களை கொடுத்தனர்
4/11

அப்போது ஸ்டாலின், “உங்களைத் தேடி வந்திருக்கிறோம். உங்களை நாடி வந்திருக்கிறேன். உங்களிடம் கை சின்னத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்” என்று தனது பேச்சை ஆரம்பித்தார்
5/11

பிறகு, ”முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிக்கிற இளங்கோவனை கைச்சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தர வேண்டும்” எனக்கூறினார்
6/11

தொடர்ந்து பேசிய அவர், “கலைஞர் பள்ளிப்படிப்பை முடித்தது ஈரோட்டில்தான். கலைஞர் கல்லூரிபடிப்பை முடித்தது காஞ்சிபுரத்தில்தான். அப்படிப்பட்ட வரலாறு நிறைந்த இந்த ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கை சின்னத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களைத் தேடி வந்திருக்கிறேன்” என்றார்
7/11

தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என சர்ச்சை எழுந்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் ஒன்றை கொடுத்தார்
8/11

ஈரோடு இடை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “ தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், ஆட்சிக்கு வரும்போது இதையெல்லாம் எங்களுக்கு செய்து தர வேண்டும் என்றும், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகள் அதையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நீங்கள் வாக்களித்தீர்கள், நீங்கள் நம்பிக்கையுடன் உள்ளீர்கள்” எனக் கூறினார்
9/11

'தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இந்த 2 ஆண்டுகாலத்தில் செய்த சாதனைகளை சொல்ல வேண்டுமென்றால் மிகப்பெரிய பட்டியலை எடுத்துச்சொல்ல வேண்டும்” என ஸ்டாலின் தனது பரப்புரையின் போது கூறினார்
10/11

மேலும் பேசிய அவர், “சொன்னதைச் செய்வோம். செய்வதை சொல்வோம் என்பர். அதைத்தான் நான் இங்கு வழிமொழிகிறேன். அதனுடன் சொல்லதை மட்டுமில்ல, சொல்லாததையும் இந்த ஸ்டாலின் செய்வான் என்பதை உங்களிடம் என்னால் காட்ட முடியும்” என்றார்
11/11

ஸ்டாலினின் உரைக்கு மக்கள் கரகோஷம் எழுப்பி தங்களது ஆதரவினை தெரிவித்தனர்
Published at : 25 Feb 2023 12:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion