மேலும் அறிய
Pongal 2024 : பொங்கல் ஓவர்..சென்னை வந்தடைவதற்குள் திண்டாடிய வெளியூர் மக்கள்!
Pongal 2024 : சொந்த ஊருக்கு சென்று பொது மக்கள், சென்னை திரும்பும் போது கவலை தோய்ந்த முகத்துடன் பேருந்திற்காக காத்திருந்தனர்.
சென்னைக்கு திரும்பும் வெளியூர் மக்கள்
1/6

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் படையெடுக்க தொடங்கினர்.
2/6

வெள்ளிக்கிழமை கிளம்பினால் கூட்ட நெரிசலாக இருக்கும் என சிலர் ஞாயிற்றுக்கிழமை கிளம்பினர். இருப்பினும், கடந்த வாரம் முதல் இந்த வாரத்தின் தொடக்கம் வரை நெடுஞ்சாலைகள் நிரம்பி காணப்பட்டண.
3/6

தொடர் விடுமுறை நாட்களை சொந்த ஊரில் செலவழித்து, விடுமுறை முடிந்தவுடன் சென்னைக்கு திரும்ப கிளம்பிய பொதுமக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்தனர்.
4/6

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
5/6

ஆம்னி பேருந்துகள் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி சென்று கோயம்பேடு சென்றனர்.திருவான்மியூர், அடையாறு, நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் வண்டலூரில் இறங்கி மாற்று பேருந்துகள் மூலம் சென்றனர்.
6/6

வீட்டிற்கு செல்ல பேருந்து கிடைக்குமா? ஆட்டோ கிடைக்குமா என்ற ஏக்கம் பலரது முகத்தில் தெரிந்தது. மாற்றும் பேருந்துகள் கிடைக்கும் வரை, மக்கள் பலர் புலம்பினர்.
Published at : 18 Jan 2024 11:52 AM (IST)
மேலும் படிக்க





















