மேலும் அறிய
கோவிந்தா கோஷம் முழங்க நடைப்பெற்ற ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்!
Ramanuja Avatar Utsavam : ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் ராமானுஜரின் திருத்தேர் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஶ்ரீ ராமானுஜரின் 1007வது அவதார உற்சவத்தின் திருத்தேரோட்டம்
1/11

ராமானுஜர் அவதரித்ததால் இது நித்திய சொர்க்கவாசல் தளமாக கருதப்படுகிறது. இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது.
2/11

இக்கோவிலின் புராண பெயர் பூதபுரி என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு சொர்க்கவாசல் கிடையாது வைகுண்ட ஏகாதசி அன்று ஆதி கேசவர் மற்றும் ராமானுஜர் இருவரும் பூதகால் மண்டபத்தில் எழுந்தருள்வார்.
3/11

அப்பொழுது சொர்க்கவாசல் திறப்பதை போல் இங்கு உள்ள சன்னதி கதவை திறப்பார்கள். இது கோவிலின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
4/11

ராகு- கேது தோஷம், திருமண தடை உள்ளவர்கள் இங்கு தரிசனம் மேற்கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை
5/11

ஸ்ரீ பெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் ராமானுஜர், இவருக்கு இளைய ஆழ்வார் என பெற்றோர் பெயர் சூட்டினார். கோவில் எதிரே ராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் தற்பொழுது உள்ளது.
6/11

இங்கு சித்திரை மாதத்தில் பத்து நாட்களும் ராமானுஜர் எழுந்தருளி தரிசனம் தருவார். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் ராமானுஜர் அவதார விழா நடைபெற்று வருகிறது.
7/11

ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம் கடந்த மே 02 ஆம் தேதி கோலகலமாக துவங்கியது. அதனை தொடர்ந்து ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் ராமானுஜரின் திருத்தேர் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
8/11

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இவ்விழாவில் 50 அடி உயரம் கொண்ட இத்திருத்தேரினை காண தமிழகம் மட்டுமின்றி அன்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரின் தரிசனம் பெற்று வருகின்றனர்.
9/11

பெண்கள் ஆர்வத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர் . தேர் திருவிழாவை முன்னிட்டு வழி எங்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
10/11

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், உள்ளிட்ட குளிர்பானங்கள் மற்றும் பாரம்பரிய பானகம் ஆகியவற்றை வழியெங்கும் வழங்கினர்.
11/11

கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா " என கோஷம் எழுப்பியும் பஜனை பாடியும் உற்சாகமாக நடனமாடியும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
Published at : 11 May 2024 12:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















