மேலும் அறிய
Kanchipuram Silk Saree : உணவு பொருட்களில் இருந்து எடுக்கப்படும் சாயம்.. காஞ்சி பட்டு சேலையின் ரகசியம் தெரியுமா?
Kanchipuram Pattu : இயற்கை சாயத்தை தயார் செய்வதற்கு மாதுளை பழம் பட்டை, மாதுளம் பூக்கள், கடுக்காய் தோல், படிகாரம் ,வெங்காயம் தோல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

கைத்தறி பட்டு சேலை
1/9

சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகியவற்றை காக்கும் வகையில் பாரம்பரிய காஞ்சி பட்டியல் முந்தைய கால இயற்கை ரசாயனத்தை கொண்டு புதிய முயற்சியாக சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
2/9

இன்றைய காலகட்டத்தில் பல பேன்சி சேலைகள் வந்தாலும், பெண்கள் மத்தியில் காஞ்சி பட்டு புடவைக்கு என தனி மரியாதை உள்ளது.
3/9

தற்போதைய பட்டு சேலையில் வண்ணம் சேர்க்கும் பணியினால் சுற்றுச்சூழல் மாசடைந்து குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் மற்றும் ரசாயனங்களால் உடல் தீங்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
4/9

இந்நிலையில் முந்தைய காலங்களில் நடைமுறைப் படுத்திய பல்வேறு பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் பட்டு சேலைக்கு சாயம் கொண்டு வரும் பணியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சில நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
5/9

“இயற்கை சாயத்தை தயார் செய்வதற்கு மாதுளை பழம் பட்டை, மாதுளம் பூக்கள், கடுக்காய் தோல், படிகாரம் ,வெங்காயம் தோல், ஒரு சில இயற்கை மூலப் பொருட்களை வைத்து தயார் செய்கிறோம்” - நெசவாளர்
6/9

“இதுவரை நாங்கள் இயற்கை மூலமாக 14 நிறங்களை கொண்டு வந்துள்ளோம்” - நெசவாளர்
7/9

“நான்கு சேலைகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ நிறத்தில் கூட சேலை தயார் செய்யப்பட்டுள்ளது, அனைத்தும் இயற்கையாக மற்றும் கைத்தறி பாரம்பரியத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது” - நெசவாளர்
8/9

ஒரு கிலோ சாயத்தில் நான்கு புடவைகளுக்கான வண்ணங்கள் மேலும் பல புதிய முயற்சியில் பல வண்ணங்கள் இளம் பெண்கள் விரும்பும் வகையில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் மீண்டும் முந்தைய பாரம்பரிய இயற்கை சாயா முறைக்கு திரும்புவதால் இயற்கை சூழலும் நமக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
9/9

இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பட்டு சேலைகளின் புகைப்படம்..
Published at : 25 Apr 2024 11:50 AM (IST)
Tags :
Kanchipuramமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement