மேலும் அறிய
G20 Summit : ஜி20 உச்சி மாநாட்டிற்காக தடபுடலாக தயாராகும் தலைநகரம்..!
G20 Summit : ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடக்க உள்ள நிலையில் தலைநகரம் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

G20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்
1/8

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் இடம்பெற்றுள்ள, ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.
2/8

அதன்படி, அந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
3/8

இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
4/8

ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன் 27 அடி உயரத்தில் 8 வகை உலோகங்களால் ஆன நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை இந்தியாவின் வளமான கலாச்சாரத்தை கண் முன் நிறுத்துவதாக பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
5/8

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் சிறந்த அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.
6/8

இந்நிலையில் இந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பிரதிநிதிகளுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பாத்திரங்களில் உணவு பரிமாறப்பட இருக்கிறது.
7/8

இந்த பாத்திரங்கள் 200க்கும் மேற்பட்ட கைவினைஞர்களால் சுமார் 50,000 மணி நேரத்தில் சுமார் 15,000 வெள்ளிப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த உலோகப்பொருள் நிறுவனமான ஐரிஸ் தெரிவித்துள்ளது
8/8

மேலும் இந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பு பிரபல ஐடிசி ஹோட்டலிடம் வழங்கப்பட்டுள்ளது.
Published at : 07 Sep 2023 01:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion