மேலும் அறிய
Boost Brain Health : மூளை ஆரோக்கியமாக இருக்கணுமா? இந்த பழக்கங்களை இன்றுடன் கைவிடுங்கள்!
Boost Brain Health : மூளை ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் பாதிக்கும் மோசமான பழக்கங்களை பற்றி இங்கு காணலாம்.

மூளை ஆரோக்கியம்
1/6

சரியாக தூங்காமல் இருப்பது : மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமான அளவு தூங்கி எழுந்துக்கொள்ள வேண்டும். சுமார் 7 - 8 மணி நேர தூக்கம் அவசியமானதாக இருக்கிறது. அப்போதுதான் அறிவாற்றல் திறன் மேம்படும்.
2/6

மது அருந்துதல் : அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களின் மூளை நாளடைவில் மங்கிவிட்டும். யோசனை செய்வதிலும் முடிவு எடுப்பதிலும் சிக்கல் ஏற்படும். ஆக, மது அருந்தும் பழக்கத்தை கைவிட வேண்டும்
3/6

மன அழுத்தம் : எப்போதும் மன அழுத்தம் இருந்தால், மூளை செயல்பாடு பாதிக்கப்படும். முடிந்த அளவிற்கு ஸ்ட்ரெஸை தவிர்த்து ரிலாக்ஸாக இருங்கள்
4/6

சமூக உரையாடல் : நண்பர்கள் வட்டாரத்துடன் பேசி சிரித்து விளையாடாமல் இருந்தால், தனிமையான உணர்வு ஏற்படும். இதனால் மூளை அரோக்கியம் பெரும் அளவில் பாதிக்கப்படும். உங்களுக்காக ஒரு சில நல்ல நண்பர்களை வைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது.
5/6

குடும்ப வாழ்க்கை : குடும்பத்துடன் வாழாமல் தனியாக வாழ்பவர்களிடம், ஒரு விதமான வெறுமை உணர்வு இருக்கும். அதனால், நீண்ட காலத்திற்கு தனியாக வாழ்வதை தவிர்க்கவும்
6/6

முன்குறிப்பிட்ட மோசமான பழக்கங்களை தவிர்த்து, நல்ல உணவுகளை உண்டு, உடற்பயிற்சி, யோகா செய்து மூளை ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் மேம்படுத்துங்கள்.
Published at : 06 Apr 2024 01:31 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement