மேலும் அறிய
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : X
- 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், கனிமொழி எம்.பி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடுகிறது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் அடங்கிய அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
- சென்னை மெரினா அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறம் 2,400 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள, வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
- மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில், இன்று நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய். இந்த விழாவிற்கு, QR அனுமதிச் சீட்டுடன் 1500 பேருக்கு மட்டுமே அனுமதி.
- பல கட்சியிலிருந்து வந்த சந்தர்ப்பவாதிகளை சேர்த்திருக்கும் விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
- சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்க்க உறுதிமொழி படிவம் கட்டாயம். உறுதிமொழி படிவம் என்பது, 2002, 2005-ம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற பெயர் (அ) பெற்றோர் விவரங்களை பூர்த்தி செய்து தர வேண்டும்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.99,840-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.12,480-க்கும் விற்பனை. வெள்ளியும் கிராமிற்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.231-க்கு விற்பனை.
- கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி, நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம். சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து 891 சிறப்புப் பேருந்தகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு.
- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜனவரி 6-ம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது.
- ஈரோட்டில் ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் வித்தை காட்டிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















