மேலும் அறிய
Banana Cake Recipe : வாழைப்பழ கேக் இனிமேல் வீட்டிலே செய்யலாம்..ரெசிபி இதோ..!
Banana Cake Recipe : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழ கேக்கை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...

வாழைப்பழ கேக்
1/7

கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன.
2/7

வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிட்லேயே கேக் செய்து அசத்துங்க.
3/7

இப்போ மைக்ரோவேவ் அவனில் எப்படி வாழைப்பழம் கேக் செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
4/7

செய்முறை ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு (beat) அடித்துக் கொள்ளவும். வெண்ணெய் சர்க்கரை நன்றாக மிக்ஸாகி, மிருதுவான பிறகு அதில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு beat செய்யவும். பிறகு மசித்த வாழைப்பழத்தை சேர்த்து அதனுடன் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதில் மோர், மைதா, பேக்கிங் பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். திக்கான பதம் வந்ததும், அதனுடன் திராட்சை, முந்திரி, பாதாம் பருப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
5/7

பின்னர் கேக் ட்ரேயில், வெண்ணெய் தடவி, அதில் தயார் செய்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வைத்து, மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து, அதில் கேக் டிரேயை வைத்து நாற்பது நிமிடம் வேகவைக்கவும்.
6/7

இதனை தொடர்ந்து கேக் நன்கு வந்துள்ளதா என சரி பார்த்து எடுக்கவும். பிறகு ஆறவைத்து துண்டுகளாக பரிமாறவும்.
7/7

குறிப்பு: உங்களிடம் மோர் இல்லை என்றால், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும் அல்லது வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். பின்னர் 1 கப் பாலை அதனுடன் சேர்க்கலாம்.
Published at : 13 Aug 2023 04:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
கல்வி
Advertisement
Advertisement