மேலும் அறிய
Healthy Liver: கொழுப்பு நிறைந்த உணவு - கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம் - இதைப் படிங்க!
Healthy Liver:நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் தண்ணீர் பெரும் உதவி புரிகிறது. தண்ணீர் ஒரு சிறந்த ’detoxicating agent'.

உணவு
1/6

அதிக கொழுப்பு நிறைந்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை (high-fat dairy products) உணவில் சேர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆய்வு முடிவு எச்சரிக்கிறது.
2/6

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை சாப்பிடுவது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதித்து fatty liver பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ' Journal of Hepatology’ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3/6

குறிப்பாக இரவு நேரங்களில் கொழுப்பு நிறைந்த சீஸ், க்ரீம் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் சாப்பிடுவது ’Metabolic dysfunction-associated steatotic liver disease’ பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
4/6

இந்த ஆய்வில் அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் கொண்ட உணவுகள் சாப்பிட்ட எல்லாருக்கும் உடல் எடை அதிகரித்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அதிக கொழுப்புள்ள க்ரீம், சீஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது கல்லீரல் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
5/6

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது, உப்பு, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்ப்பக்து, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, மது அருந்தாமல் இருப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
6/6

வால்நட்,அவகேடோ,ஆலிவ் எண்ணெய் ஆகியவைகள் கல்லீரலுக்கு நல்லது. போதிய அளவு தண்ணீர் அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.
Published at : 05 Dec 2024 08:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
இந்தியா
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion