மேலும் அறிய
Rosemilk pudding recipe : குழந்தைகள் விரும்பும் ருசியான ரோஸ்மில்க் புட்டிங்கை வீட்டிலேயே செய்யுங்கள்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ரோஸ்மில்க் புட்டிங் ரெசிபி இதோ..
ரோஸ்மில்க் புட்டிங்
1/6

புட்டிங்-ஐ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். இந்த சுவையான புட்டிங்கை சுலபமாக விட்டிலேயே செய்யனுமா? இதோ இருக்கிறது ரேஸ்மில்க் புட்டிங் ரெசிபி!
2/6

தேவையான பொருட்கள் : கொழுப்பு நிறைந்த பால் 500 மிலி, சர்க்கரை 1/4 கப், ரோஸ் சிரப், கார்ன் ப்ளோர், காய்ச்சிய பால், ரோஸ் ஃபுட் கலரிங், உப்பு சேர்க்காத வெண்ணெய்
3/6

செய்முறை : முதலில் கார்ன் ப்ளோர், கொழுப்பு உள்ள பால் மற்றும் புட் கலரிங்கை ஒரு பவுலில் சேர்த்து நன்றாக கலந்து ஓரமாக வைத்து விட வேண்டும்.
4/6

ஒரு பேனில் காய்ச்சிய பால், சர்க்கரை, ரோஸ் சிரப் சேர்த்து நன்றாக கிளரி அதன் பிறகு அந்த கார்ன் ப்ளோர் மிக்ஸை சேர்க்கவும். அதனை நன்றாக கலந்து பால் சிறிது கட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
5/6

இறுதியாக கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து, சூடு ஆறும் முன்பே சிறிய பவுல்களில் ஊற்றி 2 மணி நேரத்திற்கு ஃப்ரீசருள் வைத்து விட வேண்டும்.
6/6

2 மணி நேரத்திற்கு பிறகு பவுல்களை வெளியே எடுத்து சில விநாடிகளுக்கு வெதுவெதுப்பான நீரில் போட்டு பிறகு புட்டிங்கை தட்டில் மாற்றி விட வேண்டும். அதன் மேல் சிறிது ரோஸ் சிரப் ஊற்றி கொஞ்சம் பிஸ்தா, ரோஜா இதழ்கள் சேர்த்து அலங்கரித்தால், ருசியான ரோஸ் மில்க் புட்டிங் தயார்.
Published at : 08 Apr 2023 05:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















