Chennai Power Shutdown: சென்னைல செவ்வாய் கிழமை(20.01.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
Chennai Power Cut(20-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 20-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி
- மூர்த்தி நகர்
- வள்ளலார் நகர்
- முல்லை நகர்
- தென்றல் நகர்
- பத்மாவதி நகர்
- சரஸ்வதி நகர்
- மாசிலாமணி நகர்
- ஈட்டி அம்மன் நகர்
- ஜாக் நகர்
- சிடிஎச் சாலை
- பாலாஜி நகர்
- காளிகாம்பாள் நகர்
- ஸ்ரீநகர் காலனி
- தாமரை தெரு
- பிருந்தாவன் நகர்
- சோழம்பேடு மெயின் ரோடு
- அர்ஜூன் நகர்
- ஸ்ரீனிவாசா நகர் விரிவாக்கம்
- ஓம் சக்தி நகர்
- வளர்மதி நகர்
- பச்சை அம்மன் தெரு
- அண்ணா தெரு
- டிவிகே தெரு
- ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு
- விநாயகபுரம் 10-வது மெயின் ரோடு
- லெனின் நகர்
- மாசிலாமணி தெரு
- எரிக்கரை சாலை
- விநாயகர் நகர்
மாத்தூர்
- 1-வது மெயின் ரோடு எம்எம்டிஏ
- இடைமா நகர்
- காமராஜர் சாலை
- எம்சிஜி அவென்யூ
- சிகேஎம் நகர்
- திருவள்ளுவர் நகர்
- வெங்கட் நகர்
- ஆவின் குவார்ட்டர்ஸ்
- பால் காலனி
- பக்தவச்சலம் நகர்
- மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ்
- சிஎம்ஆர்எல் மெட்ரோ ரயில்
- மண்ணடி தெரு
- ஜீவோதயா மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















