Modi Vs Trump Tariff: ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி இந்தியா மஞ்சள் பட்டாணிக்கு 30 சதவீத வரியை அறிவித்ததாகவும், அது கடந்த நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்ததாகவும் ட்ரம்ப்பிற்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த முறை பருப்பு வகைகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க பருப்பு வகைகள் மீதான 30 சதவீத இறக்குமதி வரியை நீக்க இந்தியாவை வலியுறுத்துமாறு, குறைந்தபட்சம் இரண்டு அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்தியா விதித்த "நியாயமற்ற" வரிகள் காரணமாக, அமெரிக்க உற்பத்தியாளர்கள் "குறிப்பிடத்தக்க போட்டி பாதகத்தை" எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளனர்.
அமெரிக்க பருப்பு வகைகள் மீது இந்தியா விதித்த வரி
ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா உடனான வர்த்தகத்தில் 50 சதவீத தண்டனை வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த பதில் நடவடிக்கை தான் இது. அதாவது, அமெரிக்க பருப்பு வகைகளை இந்தியாவில் இறக்குமதி செய்யும் போது, அதற்கு 30 சதவீத இறக்குமதி வரியை விதித்தது இந்தியா. இந்த வரி, கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப்பிற்கு பறந்த கடிதம்
மொன்டானாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர்களான ஸ்டீவ் டெய்ன்ஸ் மற்றும் வடக்கு டகோட்டாவைச் சேர்ந்த கெவின் கிராமர் ஆகியோர், தங்கள் மாநிலங்கள் பட்டாணி உட்பட பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் முதல் இரண்டு மாநிலங்கள் என்றும், இந்தியா உலகின் மிகப்பெரிய நுகர்வோர் என்றும், உலகளாவிய நுகர்வில் சுமார் 27 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டு, அதிபர் ட்ரம்ப்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
மேலும், இந்தியாவில் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உலர்ந்த பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகியவை பொதுவாக நுகரப்படும் பருப்பு வகைகளில் அடங்கும். ஆனால், இந்தியா இந்த வகைகளில் அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு கணிசமான வரிகளை விதித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி இந்தியா மஞ்சள் பட்டாணிக்கு 30 சதவீத வரியை அறிவித்ததாகவும், இது கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், "நியாயமற்ற இந்திய வரிகளின் விளைவாக, அமெரிக்க பருப்பு பயிர் உற்பத்தியாளர்கள் தங்கள் உயர்தர உற்பத்தியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் போது, குறிப்பிடத்தக்க போட்டி பாதகத்தை எதிர்கொள்கின்றனர்" என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, பருப்பு பயிர் வரிகளை குறைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினால், அமெரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய நுகர்வோர் இருவருக்கும் "பரஸ்பர நன்மை பயக்கும்" என்று அவர்கள் ட்ரம்ப்பிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக, இந்தியா விதித்த இறக்குமதி வரி, தற்போது அமெரிக்க பருப்பு உற்பத்தியாளர்களை அலறவிட்டுள்ளது. இந்த கடிதத்திற்கு ட்ரம்ப் என்ன பதிலளிக்கப் போகிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், இதனால், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி மறுபுறம் எழுந்துள்ளது.
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில், ட்ரம்ப்பிற்கு சென்ற கடிதத்தால் சிக்கல் ஏற்படுமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.





















