மேலும் அறிய
Leftover Rice Chapathi : சாதம் மீந்து போய் விட்டதா..? கவலை வேண்டாம்! அதை வைத்து சப்பாத்தி செய்து அசத்திவிடுங்கள்!
Chapathi With Excess Rice: மீந்த சாதத்தை சப்பாத்தியாக மாற்றிவிடுங்கள்...ரெசிபி உள்ளே.

சப்பாத்தி
1/6

சாதம் மீந்து போவது அனைவரது வீட்டிலும் நடப்பதுதான். அதனால் கவலை கொள்ள வேண்டாம். மீந்த சாதத்தை சப்பாத்தியாக மாற்றிவிடுங்கள். ரெசிபி இதோ..!
2/6

தேவையான பொருட்கள்: மீதமான சாதம் - 1 கப், கோதுமை மாவு - 1 கப், உப்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய், நெய்.
3/6

செய்முறை: முதலில் ஒரு மிக்சர் ஜாரில் மீதமுள்ள சாதம், உப்பு மற்றும் கோதுமை மாவை சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கோதுமை மாவு, எண்ணெய் சேர்த்து பிசையவும்.
4/6

மாவு தயாரானதும் அதன் மீது எண்ணெய் தடவி பாத்திரத்தை மூடி மாவை 30 நிமிடம் ஊறவைக்கவும்.பிறகு மாவை, சிறு உருண்டைகளாக பிரித்து ஒரு சிறு உருண்டையை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்கவும்.
5/6

இப்போது ஒரு தோசை கல்லை சூடாக்கி தேய்த்த சப்பாத்தியை போட்டு, சிறிது நெய் தடவி இருபுறமும் வேகவைக்கவும்.
6/6

அவ்வளவுதான் சுவையான மீதமான ரைஸ் சப்பாத்தி தயார்.
Published at : 14 Jul 2023 02:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement