மேலும் அறிய
Advertisement

Health Tips:காலை உணவை சாப்பிட சிறந்த நேரம் எது? நிபுணர்களின் பரிந்துரைகள் இதோ!
Early Breakfast Benefits : காலை உணவு நேரமும், இரவு உணவு நேரமும் உங்களின் இதய நலத்தில் முக்கிய பங்காற்றுகிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்திருக்கிறது.

உணவு
1/6

Journal Nature Communications நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று, உங்களின் காலை உணவு நேரமும், இரவு உணவு நேரமும் உங்களின் இதய நலத்தில் முக்கிய பங்காற்றுகிறது என்று தெரிவித்துள்ளது.
2/6

இரவு உணவை தாமதாக சாப்பிட கூடாது; சீக்கிரமாக இரவு உணவை தூங்க செல்வதற்கு 2 மணி நேரம் முன்பு சாப்பிட்டு விட வேண்டும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
3/6

உணவு முறை, உணவு எடுத்துக்கொள்ளும் நேரம், இதய நலன் ஆகிய மூன்றுக்கும் இடையிலான தொடர்புதான் இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதய வால்வு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, இதய குறைபாடுகள் ஆகியவற்றில் இவை எந்த அளவுக்கு பங்கு வகிக்கின்றன என்பதை குறித்தும் இந்த ஆய்வு ஆராய்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
4/6

காலை உணவை 8 மணிக்கு சாப்பிடுபவரை விட, காலை உணவை 9 மணிக்கு முடிப்பவருக்கு, 6 சதவிகிதம் இதய நோய்க்கான அபாயம் அதிகரிப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே 8 மணிக்கே இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.
5/6

காலை உணவில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. இட்லி, புட்டு, இடியாப்பம், ஆப்பம் உள்ளிட்ட உணவுகளோடு ஆரோக்கியமற்ற கொழுப்பு உள்ள உணவுகளை சேர்க்க கூடாது.
6/6

காலை உணவில் பழங்கள், நெல்லிக்காய், நட்ஸ், உள்ளிட்டவற்றை சேர்த்து சாப்பிடுவது நல்லது. வேகவைத்த முட்டை உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
Published at : 08 Aug 2024 04:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion