மேலும் அறிய
Soya Pulao : சிக்கன் பிரியாணிக்கு டஃப் கொடுக்கும் அட்டகாசமான சோயா புலாவ்.. இப்படி செய்து பாருங்க!
Soya Pulao : வீட்டில் உள்ள நபர்களுக்கு , இந்த சுவையான சோயா புலாவை செய்து கொடுத்து அசத்துங்கள்.

சோயா புலாவ்
1/6

தேவையான பொருட்கள் : சோயா - 1 கப், தயிர் - 1/4 கப், பாஸ்மதி அரிசி - 250 மிலி, நெய் - 2 மேசைக்கரண்டி, தக்காளி - 2 , எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, தக்காளி - 2 , முழு மசாலா, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 3 சீரகம் - சிறிதளவு, வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 2 , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, தக்காளி - 2 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, புதினா இலைகள், கொத்தமல்லி தழை, உப்பு, தண்ணீர்.
2/6

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து சோயாவை சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கப் பாசுமதி அரிசியை தண்ணீரில் இருபது நிமிடத்திற்கு ஊறவைக்கவும்.
3/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சோயா, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கிய பின்பு இருபது நிமிடத்திற்கு ஊறவைக்கவும்
4/6

அடுத்தது ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
5/6

வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மசாலாவில் ஊறவைத்த சோயா சேர்த்து நன்கு வதக்கவும்.
6/6

அடுத்தது புதினா இலை, கொத்தமல்லி இலை, ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்து கிளறிவிட்டு குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான சோயா புலாவ் தயார்
Published at : 22 Aug 2024 10:55 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion