மேலும் அறிய
Sweet Corn Mayo Sandwich:சுவையான ஸ்வீட் கார்ன் மாயோ சான்விச் ரெசிபி இதோ!
Sweet Corn Mayo Sandwich: ஸ்பெஷல் ஸ்வீட் கார்ன் மாயோ சான்விச் எப்படி செய்வது என்பதை காணலாம்.

ஸ்வீட் கார்ன் மாயோ சான்விச்
1/6

தேவையான பொருட்கள்: பிரட், ஸ்வீட் கார்ன் - 1 1/2 கப் வேகவைத்தது, சீஸ், வெங்காயம் - 1 நறுக்கியது, பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, சிவப்பு குடைமிளகாய் - 1/2 கப் நறுக்கியது, பச்சை குடைமிளகாய் - 1/2 கப் நறுக்கியது, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது, மயோனைஸ் - 2 மேசைக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி, வெண்ணெய்.
2/6

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
3/6

அதன் பிறகு நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய் சேர்த்து கலந்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு வதக்கவும்.
4/6

அடுத்தது உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொத்தமல்லி இலை தூவிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
5/6

ஆறவைத்த கார்ன் மசாலாவில் மாயோனசை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். அடுத்தது பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
6/6

அடுத்தது கார்ன் மயோ பில்லிங் -ஐ இரண்டு பிரட் நடுவில் வைத்து ஒரு பானில் எண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான பிரட் மாயோ சான்விச் தயார்
Published at : 01 Sep 2024 10:46 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion