மேலும் அறிய
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - 17 லட்சம் பேர் பயனடைவர் என தகவல்
- திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது இரு நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை!
- ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் போன்ற ஒப்பிடத்தக்க நகரங்களில் நீங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும் மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு? என்ற கேள்விக்கு பதில் இல்லை" - எம்.பி. சு.வெங்கடேசன்
- ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
- திருப்பரங்குன்றத்தால் திமுக ஆட்சிக்கே திருப்பம் வரும் - நயினார் நாகேந்திரன்
- திருத்தணியில் அரசு கலைக் கல்லூரியில் ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டிக்கொண்ட பேராசிரியர்கள்..!
- "சினிமா பார்த்து எம்ஜிஆரிடம் ஏமாந்தது போல், விஜயிடம் ஏமாந்து விடக்கூடாது" - எம் எல் ஏ செல்வராஜ்
- 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ராமதாஸ் தரப்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
- சென்னை திருவொற்றியூரில் சரித்திர பதிவேடு குற்றவாளி 'அட்டு' சத்யா கொலை வழக்கில் தொடர்புடைய 'குண்டு' விக்கி என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை!
- சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.1600 கூடி ரூ.98,000க்கு விற்பனையாகிறது
- வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்ததால் மாப்பிள்ளை குடும்பத்தை வெட்டிவிட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்ற குடும்பத்தினர் 9 பேர் கைது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















