மேலும் அறிய
Tomato Ketchup:சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே செய்யலாம் - இதோ ரெசிபி!
Tomato Ketchup Recipe In Tamil: தக்காளி கெட்சப் எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம். எப்படி செய்வது என்று காணலாம்.

தக்காளி சாஸ்
1/6

தக்காளி சாஸ்/ கெட்சப் பிடிக்கும் என்பவர்கள் அதை வீட்டிலேயே தயாரிக்கலாம். தக்காளியை நன்கு கழுவி துண்டுகளாக நறுக்கவும்.
2/6

கடாயில் தண்ணீர் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, முழு மிளகு, நறுக்கிய தக்காளி போடவும். கடாயை மூடி, 30 நிமிடம் வேகவிடவும்.
3/6

தக்காளி நன்கு வெந்ததும், இதை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அரைத்த தக்காளி விழுதை வடிகட்டவும்.
4/6

இன்னொரு கடாயில், வடிகட்டிய தக்காளி விழுது ஊற்றி, கொதிக்கவிடவும். 5 நிமிடம் கழித்து, இதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
5/6

தக்காளி கெட்சப்'பின் சுவையை சரி பார்க்கவும். இறுதியாக இதில் வினிகர் சேர்த்து கிளறவும். வினிகர் தேவையில்லை எனில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களுக்கு வேண்டும் என்றால் வினிகர் சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
6/6

கெட்சப்'பின் ஈரம் நீங்கி, கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.கொதித்து அதன் தன்மை மாறும்வரை காத்திருக்கவும். அது தெரியும்.நன்கு ஆறியபின், இதில் கண்ணாடி ஜாடியில் போட்டு பிரிட்ஜ்'ஜில் வைக்கவும்.
Published at : 03 Jun 2024 01:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion