மேலும் அறிய

Ukraine Hits Russia: ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று கூறிய நிலையில், சத்தமில்லாமல் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை தங்கள் முதல் நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதல் மூலம் சிதைத்துள்ளது உக்ரைன்.

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இறுதிகட்ட தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவருகிறது. உக்ரைனும் அவ்வப்போது அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், முதன் முறையாக, நீருக்கடியில் சென்று தாக்கும் ட்ரோன் மூலம், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை சிதைத்து, ரஷ்யாவை கதற விட்டுள்ளது உக்ரைன்.

இழுபறியில் இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள்

உக்ரைன் நேட்டோவில்(NATO) இணைய முயன்றதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் நிலையில், போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும், பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறியில் தான் உள்ளன.

சமீபத்தில் 28 அம்ச அமைதித் திட்டத்தை ட்ரம்ப் முன்மொழிந்த நிலையில், அதை ரஷ்யா ஏற்றது. ஆனால், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவிற்கே சாதகமாக இருப்பதாகக் கூறி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதில் மாற்றங்களை கோரினார்.

இதையடுத்து, திருத்தப்பட்ட முன்மொழிவு வழங்கப்பட்டு, பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. திருத்தப்பட்ட அம்சங்களை உக்ரைன் பிரதிநிதிகள் ஏற்றதாகவும், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தான் முட்டுக்கட்டையாக இருப்பதகாவும், ட்ரம்ப் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ஆரம்பத்தில் இருந்தே, உக்ரைனின் விருப்பம் நேட்டோவில் சேருவதாகத் தான் இருந்தது. அது தான் உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த சில கூட்டாளிகள், இந்த முடிவை ஏற்கவில்லை. உக்ரைனுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதங்கள், ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க முடியும்.“ என்று கூறினார்.

மேலும், “அமைதியையும், ரஷ்யா மற்றொரு தாக்குதலை நடத்தாது என்ற உறுதியான உத்தரவாதங்களையும்  தான் உக்ரைன் விரும்புகிறது. தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம், உக்ரைன் நகரங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா வேண்டுமென்றே மோதலை நீடிக்கிறது. ரஷ்யாவிடம் உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்காது.“ என்று ஜெலன்ஸ்கி உறுதிபடக் கூறினார்.

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை சிதைத்த உக்ரைனின் நீர்மூழ்கி ட்ரோன்

இந்த சூழலில், உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) அதன் நீருக்கடியில் சென்று தாக்கும் "சப் சீ பேபி" ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல், நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கியது. அங்கு ரஷ்யா பல கடற்படைக் கப்பல்களை உக்ரேனிய தாக்குதல்களிலிருந்து விலக்கி வைக்க மறுசீரமைத்துள்ளது.

தாக்குதல் தொடர்பாக SBU வெளியிட்ட காட்சிகள், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பைக் காட்டியது. துறைமுகத்தின் தளவமைப்பு மற்றும் கப்பல் தளவமைப்புகளைப் பயன்படுத்தி வீடியோவின் இருப்பிடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நடைமுறையில் கடற்படைக் கப்பற்படை இல்லாத உக்ரைன், ரஷ்யாவின் பெரிய கடற்படையான கருங்கடல் கப்பற்படையைத் தாக்கவும், கிரிமியாவின் ஆக்கிரமிக்கப்பட்ட தீபகற்பத்தில் உள்ள துறைமுக நகரமான செவாஸ்டோபோலில் அதன் இருப்பிடத்திலிருந்து அதை அகற்றவும், கடல் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது.

ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த துணிச்சலான தாக்குதல் ரஷ்யாவை நிச்சயம் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு ரஷ்யா என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

 

 

தலைப்பு செய்திகள்

US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Kim Jong Un: தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Venezuela Earthquake: வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: 1 லட்சத்தைத் தாண்டும் பலி எண்ணிக்கை?
Venezuela Earthquake: வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: 1 லட்சத்தைத் தாண்டும் பலி எண்ணிக்கை?

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
Embed widget