மேலும் அறிய
Constipation: மலச்சிக்கலா பிரச்னையா? இனி கவலை வேண்டாம் - இதோ டிப்ஸ்!
அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான பிரச்சனைகள் துரித உணவுகளை உட்கொள்வதால் அதிகமாகிவிட்டன.

மலச்சிக்கலால் ஏற்படும் பிரச்சினைகள்
1/6

தினமும் காலையில் தேனுடன் கலந்த எலுமிச்சை நீரைக் குடிப்பதால், மலச்சிக்கல், செரிமானக் கோளாறு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்
2/6

ஓமம் கலந்த தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. அதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதால் வயிற்றில் வீக்கம் ஏற்படுவது குறைகிறது.
3/6

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. கேரட், ஓட்ஸ், பட்டாணி, பருப்பு, பீன்ஸ், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
4/6

இந்த இயற்கை சாறு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட பெரிய அளவில் உதவும். இந்த பிரச்சனையை அடிக்கடி எதிர்கொள்ளும் நபர்கள் தங்கள் உணவில் கற்றாழை சாற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய அளவில் தொடங்கி, படிப்படியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
5/6

சீரகத் தண்ணீர் நம் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது, வாயு மற்றும் வீக்கம் பிரச்சனையை நீக்குகிறது மற்றும் சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
6/6

இது செரிமான அமைப்பை பலப்படுத்துவதுடன், வயிற்றை சுத்திகரித்து ஒட்டுமொத்த செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.
Published at : 15 Feb 2024 07:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement