மேலும் அறிய
கொளுத்தும் கோடை வெப்பத்தை சமாளிக்க என்ன செய்யலாம்..? இதோ சூப்பர் டிப்ஸ்!
கொளுத்தும் கோடை வெப்பத்தை சமாளிக்க உதவும் டிப்ஸ்களை இங்கு காணலாம்.
கோடை வெயில் மாதிரி படம்
1/10

கோடை காலத்தில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது
2/10

வயதானோர், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது நல்லது
3/10

உடல்சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை அனுகுவது நல்லது
4/10

பெரும்பாலும் வெயிலில் செல்லும் மக்கள் குடையை பயன்படுத்துவது நல்லது
5/10

கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்
6/10

கோடை காலத்தில் ப்ரிட்ஜ் தண்ணீரை குடிப்பதை விட பானையில் உள்ள தண்ணீரைக் குடிப்பது நல்லது
7/10

கோடையில் வரக்கூடிய பாதிப்புகளான கொப்பளம், பரு அம்மை இவைகளுக்கு வேப்பிலை, மஞ்சள் கலந்து அரைத்து பூசுவது நல்லது
8/10

தினமும் 2 முறை குளிப்பது, எண்ணெய் குளியல், உடல் சூட்டை முற்றிலும் தவிர்க்கும்
9/10

காரம், புளிப்பு, உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும்.
10/10

தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது. தயிர், மோர், பால், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற நீர் ஆகாரங்களை பருகுவதன் மூலம் உடலின் வெப்பநிலை சமமாக இருக்கும்
Published at : 15 Mar 2023 01:35 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு





















