IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA 2nd T20: இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

IND Vs SA 2nd T20: இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மொகாலி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா -தென்னாப்ரிக்கா 2வது டி20
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை அடுத்து இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையே, டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. இதிலும் வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் வலுவான முன்னிலை பெற இந்தியா முனைப்பு காட்டுகிறது. தொடரின் முதல் வெற்றியை பெற தென்னாப்ரிக்கா அணியும் முனைப்பு காட்டுகிறது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
சொதப்பும் கில், ஸ்கை:
இந்திய அணி டி20 தொடர்களில் அசத்தி வந்தாலும், தனிநபர்களின் செயல்பாடு என்பது கவலை அளிக்கும் விதமாகவே உள்ளது. குறிப்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் அரைசதம் விளாசியே 10 இன்னிங்ஸ்களுக்கும் மேலாகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள சூழலில், இருவரும் ஃபார்முக்கு திரும்புவது மிகவும் முக்கியமானதாகும். அதற்கான முன்னோட்டமாக தென்னாப்ரிக்காவின் தொடர் அமையுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சஞ்சுவிற்கு வாய்ப்பு?
ஏற்கனவே துணை கேப்டன் என்ற பெயரில் அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில்லால், தொடக்க ஆட்டக்காரர் நிலையில் இருந்து சஞ்சு கீழே தள்ளப்பட்டார். தற்போது ஜிதேஷ் சர்மாவை விக்கெட் கீப்பராக சேர்த்து, ப்ளேயிங் லெவனில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். இது அவருக்கு நிகழும் அநீதியாகவே கருதப்படுகிறது. எதிர் வரும் உலகக் கோப்பை மற்றும் கில்லின் ஃபார்ம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, இந்த போட்டியிலாவது சஞ்சுவிற்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தென்னாப்ரிக்காவை சமாளிக்குமா இந்தியா?
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஹர்திக் நல்ல ஃபார்மில் உள்ளனர்.அபிஷேக் சர்மா, அக்சர் படேல் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர். கடந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் உள்ளிட்ட பவுலிங் யூனிட்டும் சிறப்பாக செயல்பட்டது. அதே மனநிலையுடன் இறங்கினாலே இன்றைய போட்டியிலும் இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்த முடியும்.
மைதானம் எப்படி?
சுற்றிலும் உயரமான ஸ்டாண்டுகள் இல்லாததால், மொகாலி மைதானம் பனியால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஐபிஎல்லில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் இந்த மைதானத்தில் 6-5 என்ற சாதனையைப் படைத்துள்ளன. 200க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன,
உத்தேச ப்ளேயிங் லெவன்:
இந்தியா:அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா/ சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, பும்ரா
தென்னாப்பிரிக்கா : குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரெவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், லூத்தோ சிபம்லா/கார்பின் போஷ்/ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ், நிகிடி, நார்ட்ஜே.




















