மேலும் அறிய
Udhayanidhi Stalin : சொத்து மதிப்பில் அப்பாவையே மிஞ்சிய உதயநிதி...ஸ்டாலினைவிட மூன்று மடங்கு..முழு விவரம் இதோ
Udhayanidhi Stalin Net Worth: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியின் ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு குறித்தான தகவல்களை விவரமாக பார்க்கலாம்
உதயநிதி ஸ்டாலின்
1/6

ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் துர்கா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் உதயநிதி ஸ்டாலின். 1977 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் தொடக்கத்தில் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். 2008 ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளிவந்த குருவி திரைப்படத்தை தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்தது. தயாரித்த முதல் படமே உதயநிதிக்கு தோல்விப்படமாகவே அமைந்தது
2/6

அடுத்தபடியாக ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் வெளியான சூர்யாவின் ஆதவன் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இதுவரை ரெட் ஜெயன்ட் சார்பாக 8 படங்களை தயாரித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா, மதராஸபட்டினம் , அரண்மனை 3 , பாஸ் எ பாஸ்கரன் , மைனா , பொன்னியின் செல்வன் இரு பாகங்கள் என பல வெற்றிப்படங்களை விநியோகித்துள்ளது ரெட் ஜெயன்ட் மூவிஸ்.
Published at : 27 Nov 2024 04:47 PM (IST)
மேலும் படிக்க





















