மேலும் அறிய
Thalapathy 68 : ‘எதிர்காலத்திற்கு வருக..’ ட்ரெண்டாகும் வெங்கட் பிரபுவின் ட்வீட்!
Thalapathy 68 : தளபதி 68 குறித்த வெங்கட் பிரபுவின் எக்ஸ் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தளபதி 68
1/7

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
2/7

அடுத்ததாக விஜய், வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக சிம்ரன், ஜோதிகா, ப்ரியங்கா மோகன் ஆகியோரின் பெயர்கள் கூறப்பட்டு வருகிறது.
3/7

தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய் உட்பட படக்குழுவை சேர்ந்த சிலர் கலிஃபோர்னியாவிற்கு சென்றுள்ளனர்.
4/7

அங்குள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் ’விஜய் 68’ படத்துக்கான தொழில்நுட்பப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
5/7

இந்த புகைப்படங்களை பதிவிட்ட வெங்கட் பிரபு ‘எதிர்காலத்துக்கு வாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
6/7

இந்த பதிவை பார்த்த இண்டெர்நெட் வாசிகள் தளபதி 68 சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இருக்கலாம் என்றும் பல வகையான ஃபேன் மேட் போஸ்டர்களையும் தெரிக்கவிட்டு வருகின்றனர்.
7/7

மேலும் அதிக பொருட்செலவில் மேற்கொள்ளப்படும் இத்தொழில்நுட்பம் இதற்கு முன்னதாக சூர்யாவின் மாற்றான், ரஜினியின் 2.0 மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படங்களில் பயன்படுத்தி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
Published at : 01 Sep 2023 02:27 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















