மேலும் அறிய
Radhika Sarathkumar : கிழக்கு வாசலில் ரீ என்டரி கொடுக்கும் கிழக்கே போகும் ரயில் நடிகை ராதிகா சரத்குமார்!
Radhika Sarathkumar Kizhaku Vaasal : கிழக்கு வாசல் எனும் சீரியலில் தான் நடிக்கவுள்ளதாக ராதிகா சரத்குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

கிழக்கு வாசல் சீரியல் குழு
1/6

எம். ஆர். இராதவின் மகளான ராதிகா, கிழக்கே போகும் ரயில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குடும்பங்களை கவரும் படத்தில் நடித்த இவர், அனைவருக்கும் பிடித்த விண்டேஜ் நடிகையானார்.
2/6

வெள்ளித்திரையில் களம் கண்ட ராதிகா, சின்னத்திரையிலும் இறங்கி அசத்தி மற்ற நடிகைகளுக்கு முன்மாதிரியாக மாறினார். சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களில் நடித்து பல இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.
3/6

இப்போது பல படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வருகிறார். சமீபத்தில், சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
4/6

தற்போது, கிழக்கு வாசல் எனும் சீரியலில் தான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
5/6

திருமதி செல்வம் புகழ் சஞ்சீவ் நடிக்கும் இந்நாடகத்தில், விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் முன் நின்று வழிநடத்தி இயக்கவுள்ளார்.
6/6

பொதுவாக ராதிகா நடிக்கும் சீரியல்கள் அனைத்தும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். ஆனால், இம்முறை, கிழக்கு வாசல் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
Published at : 05 Apr 2023 12:58 PM (IST)
Tags :
Radhika Sarathkumarமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion