மேலும் அறிய
Park Movie : ஒரு நொடி ஹீரோவின் அடுத்த அத்தியாயம்.. வெளியானது பார்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
Park Movie : இது சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
பார்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
1/6

பார்க் எனும் இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார். அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் E.நடராஜ் பார்க் படத்தைத் தயாரித்துள்ளார்.
2/6

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஒரு நொடி' படத்தின் கதாநாயகன் தமன் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார். பிரதான வில்லனாக யோகிராம் நடித்துள்ளார்.கதாநாயகியின் தந்தையாகத் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ் நடித்துள்ளார்.இவர்களைத் தவிர பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
3/6

திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடந்துள்ளது.
4/6

“படத்தின் முதல் பாதி வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்; இரண்டாவது பாதி இதயம் வலிக்கப் பயமுறுத்தும். இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த திரில்லர் என்ற வகையில் உருவாகியுள்ளது” என படம் பற்றி இயக்குநர் ஈ.கே. முருகன் கூறினார்.
5/6

படத்திற்கு ஒளிப்பதிவு பாண்டியன் குப்பன். இவர் ஒளிப்பதிவாளர் வெற்றியின் உதவியாளர். இசை ஹமரா சி.வி,படத்தொகுப்பு குரு சூர்யா, நடனம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் சுரேஷ் சித், கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ், பாடல்கள் நா. ராசா, ஸ்டண்ட் எஸ் .ஆர் .ஹரி முருகன், தயாரிப்பு நிர்வாகி கே. எஸ் சங்கர், உடைகள் ஜி. வீரபாபு, ஒப்பனை ஷேக் பாட்ஷா, நிர்வாகத் தயாரிப்பாளர் எம். அருள், இணைத் தயாரிப்பாளர் நா.ராசா, தயாரிப்பு லயன் ஈ. நடராஜ்.
6/6

படத்தை 36 நாட்களில் ஷூட் செய்துள்ள படக்குழுவினர், இதை ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டார்.
Published at : 05 Jul 2024 10:10 AM (IST)
Tags :
Thaman Kumarமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement





















