New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
New Cars Launching Soon: டாடா, மாருதி சுசுகி உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் 7 புதிய கார்களை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

New Cars Launching Soon: இந்தியாவில் கார்கள் பயன்பாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டும், அவர்களை தக்க வைக்கவும், அதிகரிக்கவும், ஒவ்வொரு நிறுவனமும் புதிய புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள கார்களின் பட்டியலை கீழே காணலாம்.
1. Maruti Suzuki e Vitara:
மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் Maruti Suzuki Vitara. இந்த காரின் மின்சார வெர்சனே Maruti Suzuki e Vitara ஆகும். இன்னும் சில நாட்களில் இந்த கார் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. டெல்டா, ஜெடா, ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்களில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. 49 கிலோவாட், 61 கிலோவாட் பேட்டரியில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கிலோமீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. 172 பிஎச்பி குதிரை ஆற்றல், 193 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
2. Renault Duster:
ரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய வரவாக சந்தைக்கு வர உள்ள கார் Renault Duster ஆகும். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. நியூ ஜென் மாடலான இந்த கார் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் கொண்டதாக அறிமுகமாக உள்ளது. 154 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
3. Skoda Kushaq Facelift:
ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் Skoda Kushaq. இந்தியாவில் இந்த காருக்கு தனி வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், Skoda நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள கார் Skoda Kushaq Facelift ஆகும். பனோராமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, லெவல் 2 அடாஸ் வசதி கொண்டது. 1 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டதாக இந்த கார் வர உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் உள்ளது.
4. Nissan Gravite MPV:
இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனம் நிஸான். இவர்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள கார் Nissan Gravite MPV. இந்த கார் வரும் 21ம் தேதி அறிமுகமாக உள்ளது. 1.0 லிட்டர் என்ஏ பெட்ரோல் எஞ்ஜின் வசதி உள்ளது. 76 எச்பி குதிரைத் திறனும், 95 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர்களை கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் வசதி கொண்டது.
5. Tata Punch Facelift:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமாகன படைப்பு Tata Punch. இந்த காரின் புதிய வெர்சன் Tata Punch Facelift ஆகும். 10.25 இன்ச் டிஸ்ப்ளே, 7 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச் பேஸ்ட் ஏசி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா வசதி கொண்டது. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய டர்போ பெட்ரோல் மோட்டார் வசதி கொண்டதாக இந்த கார் அறிமுகமாகிறது.
6. Volkswagen Tayron:
பிரபலமான கார் நிறுவனமான வோல்க்ஸ்வேகன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் கார் Volkswagen Tayron ஆகும். 7 சீட்டர் எஸ்யூவி கார் இதுவாகும். 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் கொண்டது இந்த கார் ஆகும். 201 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 7 கியர்களை கொண்டது.
7. Toyota Urban Cruiser EV:
டொயோட்டோ நிறுவனத்தின் பிரபலமான கார் Toyota Urban Cruiser. இதன் மின்சார கார் வெர்சன் Toyota Urban Cruiser EV ஆகும். டொயோட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் முதல் எல்க்ட்ரிக் கார் இதுவாகும். இந்த கார் 19ம் தேதி அறிமுகமாக உள்ளது. 48.8 கிலோவாட் மற்றும் 61.1 கிலோவாட் பேட்டரி கொண்ட திறன் கொண்ட காராக அறிமுகமாக உள்ளது. ஒரே சார்ஜில் 500 கிலோமீட்டர் செல்லும் வசதி கொண்டது.





















