மேலும் அறிய
Bombay : 28 வருடங்களை கடந்தும் தமிழ் சினிமாவில் மேலோங்கி நிற்கும் மணிரத்தினத்தின் பம்பாய்!
மதங்களை கடந்து மனங்கள் ஒன்றிணைவதுதான் காதல் என்பதை கூறிய பாம்பே வெளியாகி 28 வருடம் நிறைவானது.

பாம்பே பட போஸ்டர்
1/6

பம்பாய் படம் வெளியாகி, 28 வருடங்கள் கடந்துவிட்டதை நம்ப முடியாத அளவிற்கு இன்றும் பலரின் மனதில் அப்படம் இடம்பெற்றுள்ளது. மணிரத்னத்தின் மத நல்லிணக்க காவியத்திற்கு இசை மூலம் உயிர் கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
2/6

அரவிந்த் ஸ்வாமி சேகர் எனும் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். பிறப்பால் இந்துவான சேகர், ஷைலா பானு எனும் இஸ்லாமிய பெண் மீது காதல் கொள்வார்.
3/6

இந்த ஜோடி, சமூகத்தில் நிலவி வரும் மத வேற்றுமையை தாண்டி திருமணம் செய்து கொள்வர்.
4/6

ரோஜாவில் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்தினம் காம்போ, பம்பாய் படத்திலும் இணைந்து வெற்றிக்கனியை அடைந்தது.
5/6

மணிரத்தினத்தின் க்ளாசிக் படைப்புகளில், இடம்பெறும் இப்படம் காதலுடன் அரசியலையும் காட்சிப்படுத்தியிருக்கும்.
6/6

நாசரின் கோபக் கொந்தளிப்பு, கிட்டியின் அலட்டில்லாத நடிப்பு, பம்பாய் படத்தை சிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் மத பிரிவினை ஓங்கி இருந்த நிலையில் மணிரத்தினத்தின் படைப்பு பெரும் மாற்றத்தை உருவாக்கியது.
Published at : 11 Mar 2023 05:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
பொழுதுபோக்கு
ஆட்டோ
Advertisement
Advertisement