மேலும் அறிய
HBD Lakshmi Menon : அள்ளி முதல் பாரதி வரை..தமிழ் சினிமாவை கலக்கி வந்த இளம் நடிகையின் கதை!
இன்று பிறந்தநாள் காணும் லட்சுமி மேனனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

லட்சுமி மேனன்
1/6

பள்ளிக்கூடம் போகும் வயதில் கூத்து பட்டறைக்கு கூட போகமால் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். மாலிவுட்டில் தன் திரை பயணத்தை தொடங்கிய இவர், பிரபு சாலமனின் கும்கியில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
2/6

முதல் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய லட்சுமியை பார்த்த இயக்குநர் பிரபாகரன், சசிகுமாருக்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
3/6

கிராமத்து கதாபாத்திரங்களுக்கென செதுக்கி வைத்தவராக வலம் வந்த லட்சுமி மேனன், நான் சிகப்பு மனிதன் படத்தில் சிட்டி பெண்ணாக நடித்து பாராட்டுகளை பெற்றார்.
4/6

மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்கா என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனனின் கால்ஷீட் நிரம்பி வழிந்த காலம் அது.
5/6

மீண்டும் தன் முதல் ஆன் ஸ்கீரின் ஜோடியான விக்ரம் பிரபுவுடன் இணைந்து புலிக்குத்தி பாண்டியில் நடித்தார். முன்னதாக இவருக்கு வொர்க்-கவுட்டான கிராமத்து பின்னணி கதை, இம்முறை சொதப்பியது.
6/6

வருடத்திற்கு 4-5 படங்களில் நடித்து வந்த லட்சுமியின் காட்டில் கொட்டி வந்த மழை நிற்க, பரதத்தில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
Published at : 19 May 2023 04:02 PM (IST)
Tags :
Lakshmi Menonமேலும் படிக்க
Advertisement
Advertisement