மேலும் அறிய
Varun Dhawan: ‘இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆசையா?’ பாலிவுட் நடிகர் வருண் தவான் குறித்த சுவாரஸ்ய தகவலகள்!
Varun Dhawan Birthday: பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானின் பிறந்தநாளையொட்டி அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வருண் தவான் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
1/10

பாலிவுட்டில் பிரபல நடிகர்களுல் ஒருவர் வருண் தவான். இவர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வருண் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வேமா?
2/10

வருண் தவான், சிறு வயதிலிருந்தே மிகவும் துருதுருவென இருப்பாராம். அது மட்டுமன்றி, மிகவும் குறும்புகார பிள்ளையாகவும் வளர்ந்தவர் இவர். வருணின் பெற்றோருக்கு அவரை அடக்குவதே பெரும் வேலையாக இருக்குமாம். இது, ஒரு பிரச்சனையாக பார்க்கப்பட்டதாம்.
3/10

இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்ற இவர், சினிமாவின் மீதிருந்த ஆர்வம் காரணமாக 2010ஆம் ஆண்டு உதவி இயக்குநராக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
4/10

வருணின் குடும்பத்தினர், இவரை ‘பப்பு’ என செல்லமாக அழைப்பார்களாம்.
5/10

வருண் தவான் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய ரசிகராம். அதிசயம் என்னவென்றால், இன்றுதான் அவருக்கும் பிறந்தநாள்.
6/10

சிறுவயதில் இருந்த போது, வருண் தவான் மல்யுத்த வீரராக வேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால், விதி அவரை மிகப்பெரிய ஹீரோவாக மாற்றிவிட்டது.
7/10

விக்ரம், கே.ஜி.எஃப் மற்றும் காந்தாரா ஆகிய படங்கள் தன்னை மிகவும் ஈர்த்ததாகவும், திரைக்கு வந்த புதிதில் இருந்தே தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததாகவும் வருண் தவான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
8/10

வருண் தவானிற்கு ஐஸ்-க்ரீம் என்றாம் மிகவும் பிடிக்குமாம். வருண் தவானிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள ஜான்வி கபூர், “இன்று உனக்கு நிறைய ஐஸ்-க்ரீம் கிடைக்க வாழ்த்துகிறேன்” என தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
9/10

வருண் தவான், அவரை சுற்றியுள்ள பெண்களை பாதுகாப்பதிலும் கண்ணாக இருப்பார். ஒரு நடிகையின் கோட்டை வருண் தவான் சரி செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.
10/10

வருண் தவானின் சிட்டடெல் என்ற தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. இதில், பிரியங்கா சோப்ரா, சமந்தா உள்பட பல நடிகர்-நடிகைகளுடன் நடித்துள்ளார். இன்று, வருணின் பிறந்தநாளையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
Published at : 24 Apr 2023 12:25 PM (IST)
மேலும் படிக்க





















