மேலும் அறிய
Alia bhatt : 'எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே..'முதலாம் திருமண நாளை கொண்டாடும் ஆலியா-ரன்பீர் தம்பதி!
திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ஆலியா பட், தன் இன்ஸ்டா பக்கத்தில் ஆலியா மற்றும் ரன்பீர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஆலியா பட் - ரன்பீர் கபூர்
1/6

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகிய இருவருமே ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்கள். இவர்கள் இருவரும் திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களது அசாத்திய நடிப்பின் மூலம் திரையுலகில் நல்ல இடத்தில் உள்ளனர்.
2/6

ஆலியா மற்றும் ரன்பீர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ப்ரமாஸ்திரா. இந்த படத்தின் படப்பிடிப்பு 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த படப்பிடிப்பின் போது இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
3/6

பாலிவுட்டின் பாப்புலர் காதல் ஜோடிகளாக வலம் வந்த ஆலியா மற்றும் ரன்பீர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
4/6

இவர்களுக்கு 2022 ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதியன்று பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ராஹா என பெயர் சூட்டினர்
5/6

தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ஆலியா பட், தன் இன்ஸ்டா பக்கத்தில் ஆலியா மற்றும் ரன்பீர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6

அந்த புகைப்படங்களை பகிர்ந்து ஆலியா மற்றும் ரன்பீர் ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 14 Apr 2023 03:44 PM (IST)
மேலும் படிக்க





















