Chennai Power Shutdown: சென்னை மக்களே.! நாளை ( 31.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Shutdown January 31,2025: சென்னையில் மின் பராமரிப்பு காரணமாக, நாளை போரூர், மாங்காடு, நங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Power Cut: சென்னையில், நாளை ஜனவரி 31ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
சென்னையில் நாளை மின்தடை: 31.01.2025
இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்:
சென்னை மாநகரில் அண்ணாநகர் பகுதியில் அண்ணாநகர் A முதல் W பிளாக், RV நகர் அனைத்தும், TP சத்திரம் பகுதி, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையின் ஒரு பகுதி, பெரியகூடல் AA பிளாக் முதல் AM பிளாக், VOC நகர் பகுதி, ஷெனாய் நகர் முழு பகுதி, திருவீதியம்மன் கோவில் பகுதி மற்றும் அமிஞ்சிக்கரை அனைத்தும்.
மடிப்பாக்கம் பகுதியில் குபேரன் நகர், ராம் நகர் தெற்கு மற்றும் வடக்கு, எல்ஐசி நகர், ஷீலா நகர், ராமலிங்கம் நகர், சிவப்பிரகாசம் நகர், பிருந்தாவன் நகர், சதாசிவம் நகர், பெரியார் நகர், மகாலட்சுமி நகர், மடிப்பாக்கம் பகுதி, புழுதிவாக்கம் பகுதி, கார்த்திகேயபுரம் பகுதி, உள்ளகரம் பகுதி, ஐயப்ப நகர், கீழ்கட்டளை பகுதி, மூவரசம்பேட்டை பகுதி, லட்சுமி நகர், அன்னை தெரசா நகர், சபரி சாலை ஒரு பகுதி, பஜார் ரோடு ஒரு பகுதி மற்றும் மேடவாக்கம் மெயின் ரோடு ஒரு பகுதி .
Also Read: Chennai AC Bus: சென்னையில் எண்ட்ரி கொடுக்கும் தனியார் பென்ஸ் பேருந்துகள்: அரசு அனுமதி?
பராமரிப்பு பணி:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது.
இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

