மேலும் அறிய

ராஷ்மிகா மாதிரி பொண்டாட்டி இருக்க.. த்ரிஷா கேக்குதா? - விஜயை விமர்சித்து வசனம் - வைரல் வீடியோ!

தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் வெளியான படம் Bhartha Mahasayulaku Wignyapthi. இந்த படத்தின் தமிழ் டப்பிங்கில் விஜய், த்ரிஷாவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் வசனம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

தெலுங்கில் நடிகர் ரவிதேஜா நடித்துள்ள பிஎம்டபிள்யூ படத்தின் டப்பிங் வசனம் சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. 

Bhartha Mahasayulaku Wignyapthi படம்

கடந்த மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் வெளியான படம் Bhartha Mahasayulaku Wignyapthi. இப்படம் சுருக்கமாக BMW என அழைக்கப்படுகிறது. இப்படத்தை கிஷோர் திருமலா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத், டிம்பிள் ஹயாத்தி, சுனில் குமார், அஜய் கோஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்த இப்படம் முக்கோண காதல் உறவை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த மார்ச் 13ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. 

சர்ச்சையை கிளப்பிய வசனம்

இந்த நிலையில் படத்தில் ஒரு காட்சியில் ஹீரோ ரவிதேஜாவைப் பார்த்து நடிகை டிம்பிள் ஹயாத்தி, “வீட்டில் ராஷ்மிகா மாதிரி ஒரு பொண்டாட்டி வச்சிகிட்டு இந்த திரிஷா கிரிஷாலாம் தேவையா என கேட்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த காட்சியில் இருக்கும் சுனில், ‘த்ரிஷா பற்றி மட்டும் நீ எதுவும் பேசாத’ என சொல்ல, அதற்கு, ‘என்ன மாமா இவ்வளவு ஓபனா பேசிட்ட?’ என ரவிதேஜா கேட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

இந்த காட்சிகள் மறைமுகமாக விஜய் - த்ரிஷாவை மையப்படுத்தி தான் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது. இதற்கு விஜய், த்ரிஷா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

விஜய் - த்ரிஷா சர்ச்சை

சமீபத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். அதில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகை பெயரை குறிப்பிடாத நிலையில் பலரும் அது த்ரிஷா என கூறி வருகின்றனர். இதுதொடர்பாக விஜய், த்ரிஷா, சங்கீதா தரப்பு என யாருமே விளக்கம் கொடுக்கவில்லை. 

இதற்கும் ரவிதேஜா படத்துக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா? - கதைப்படி ரவிதேஜாவுக்கு டிம்பிள் ஹயாத்தி என்ற மனைவி இருக்கும்போது அவர், ஆஷிகா ரங்கநாத் உடன் காதல் உறவில் இருப்பது போலவும் அவர்களை ஒரே சமயத்தில் எதிர்கொண்டு சமாளிக்கும்படியும் காமெடியாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் தான் வேண்டுமென்றே இப்படியான வசனத்தை வைத்தால் படம் எளிதாக ரீச் ஆகும் என முடிவு செய்திருப்பார்கள் என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget