மேலும் அறிய
Ajith Kumar:துபாய் கார் ரேஸில் அஜித் குமார் அணி வெற்றி - கொண்டாட்ட புகைப்படங்கள்!
Ajith Kumar: நடிகர் அஜித் குமார் கார் அணியில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. வெற்றி கொண்டாட்ட புகைப்படங்களை காணலாம்.

நடிகர் அஜித் குமார் கார் ரேஸ்
1/5

தமிழ் திரையுல நட்சத்திரம் நடிகர் அஜித்குமார். நடிகராக மட்டுமின்றி துப்பாக்கிச் சுடும் வீரர், ட்ரோன் வடிவமைப்பாளர், புகைப்பட கலைஞர் என பன்முகம் கொண்டவர். அவர் கார், பைக் பந்தய வீரர்..
2/5

துபாயில் நடக்கும் எஸ்24 கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் தனது அணியை களமிறக்கினார். இந்த பந்தயம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அஜித்தின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இவருக்கு சமீபத்தில் மேற்கொண்ட கார் பயிற்சியில் விபத்து ஏற்பட்டது.
3/5

போர்ஷே 992 கார் பிரிவில் அஜித்தின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. 3வது இடம்பிடித்த மகிழ்ச்சியில் அஜித்குமார் மகிழ்ச்சியுடன் வெற்றியை கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. .மேலும், இந்திய நாட்டின் தேசிய கொடியை கையில் ஏந்தி கார் பந்தய மைதானத்தில் உலா வந்தார்.
4/5

வெற்றி பெற்றதும் அஜித் - ஹாலினி இருவரும்"Flying Kiss’ கொடுத்த புகைப்படம், அஜித் வெற்றி மகிழ்ச்சியில் ஷாலினிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
5/5

வெற்றி பெற்ற அஜித்திற்கு அங்கு குவிந்திருந்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அஜித் கார் பந்தயத்தில் பங்கேற்று இருப்பதால் தினமும் அவரை காண அங்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் அஜித்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published at : 12 Jan 2025 07:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion