மேலும் அறிய

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

விஜய், அஜித்திற்கு நிகரான நடிகராக இருந்த தான் அடுத்தகட்டத்திற்கு செல்ல இயலவில்லை என்று நடிகர் விக்னேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் விக்னேஷ். 1992ம் ஆண்டு சின்னத்தாயி என்ற படம் மூலமாக 21 வயதில் நடிகராக அறிமுகமானார். கிழக்குச் சீமையிலே படம் மூலமாக மிகவும் பிரபலமானார். விஜயகாந்த், சரத்குமார், பிரபு, பிரசாந்த் என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக நடித்தார்.

இவர் கதாநாயகனாக நடித்த பொங்கலோ பொங்கல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், தொடர்ந்து இவரால் கதாநாயனாக மிகப்பெரிய வெற்றியைப் பெற இயலவில்லை. திரைப்படங்களில் பெரியளவு வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய், அஜித், விக்னேஷ்:

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, ராமன் அப்துல்லா, கிழக்குச்சீமையிலே பண்ண பிறகு கொஞ்சம் உஷார் ஆகிட்டேன். ஆச்சார்யாவில் ரொம்ப நல்லா பண்ணியிருப்பேன். ஈஷாவிலும் நல்லா பண்ணியிருப்பேன். அதற்குள் நிறைய ஹீரோக்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். விஜய்,  அஜித் பூம் ஆகிவிட்டார்கள். மாதவன் அப்படி, இப்படி வந்துவிட்டாங்க.

நான் வரும்போது விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு. அந்த நேரம் நல்லா இடைவெளி இருந்துச்சு. காலம் கைவிட்டு போயிடுச்சு. அதன்பின்பு, நம்மால் அதைப்பிடிக்க இயலவில்லை. பொங்கலோ பொங்கல் வெற்றிப்படம். சூரி படத்தை நடிகர் சூர்யா பார்த்துவிட்டு போன் பண்ணாரு. என்னய்யா இப்படி மிரட்டி வச்சுருக்க. அப்போது அவர் கஜினி பண்ணவே இல்லை. சூரி நல்லாவே பண்ணியிருப்பேன்.

வாய்ப்பு கேட்பேன்:

இப்போது படம் பண்ணுவது ஈஸி. ரிலீஸ் செய்வது கஷ்டம். முன்பு படம் பண்ணுவது கஷ்டம். ரிலீஸ் பண்ணுவது ஈஸி. இப்போது படம் நீங்க எடுத்திடலாம். அதை ரிலீஸ் செய்வதற்கு 3,4 மடங்கு பணம் வேணும். தங்கமா இருந்தாலும் அதற்கு விளம்பரம் தேவை.

தயாரிப்பு பண்ணக்கூடாது. பெரிய, பெரிய இயக்குனர்களைச் சந்தித்து நாம் வாய்ப்பு கேட்க வேண்டும் என்று முடிவு பண்ணியிருக்கேன். 10 படம் ஹீரோவா பண்ணியிருக்கோம். இதற்கு பிறகு யாரிடம் சென்று வாய்ப்பு கேட்பது என்று எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு. இப்போது இல்லை. நமக்கு பசிக்குது, நாம கேட்பது தவறு இல்லை.

நீங்க 56 படங்கள் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு தகுந்த மாதிரி கதாபாத்திரம் வேணும்னு சொல்லியிருக்காங்க. சிலர் தர்றேனு சொல்லியிருக்காங்க. அவர்களை பார்த்துக்கொண்டே செய்ய வேண்டும். புதுமுகம் போலவே இறங்கிவிட்டேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னணி ஹீரோ:

விக்னேஷ் கூறியது போல 1994 காலகட்டம் வரையில் விஜய், அஜித் ஆகியோரைக் காட்டிலும் விக்னேஷ் பெரிய நடிகராகவே இருந்தார். சின்னத்தாயி, கிழக்குச்சீமையிலே என மிகப்பெரிய படங்களில் நடித்து கவனம் பெற்றிருந்தார். ஆனால், அதன்பின்பு விஜய் மற்றும் அஜித் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தனர். தற்போது முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கோரி வருகிறார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
Embed widget