மேலும் அறிய
Aishwarya rajesh : ‘ ஸ்ரீவள்ளியாக நான் நன்றாக நடித்திருப்பேன்..’ சும்மா இருந்த ராஷ்மிகாவை சீண்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
“புஷ்பா படத்தில் ராஷ்மிகா நன்றாகப் பொருந்தி இருந்தார். ஆனால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்த கதாபாத்திரத்திற்கு நான் மிகவும் பொருத்தமாக இருப்பேன்” - ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் - ராஷ்மிகா மந்தனா
1/6

கோலிவுட் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2/6

விஜய் தேவரகொண்டாவின் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் மூலம் டோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
3/6

தெலுங்கில் டப்பாகி வெளியாகியுள்ள தன் ஃபர்ஹானா படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.
4/6

“எனக்கு தெலுங்கு இண்டஸ்ட்ரி பிடிக்கும், மீண்டும் ஒரு நல்ல தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்தேன். ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை.” என பேசினார்.
5/6

மேலும் பேசிய ஐஸ்வர்யா, “புஷ்பா படத்தில் ராஷ்மிகா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாகப் பொருந்தி இருந்தார். ஆனால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்த கதாபாத்திரத்திற்கு நான் மிகவும் பொருத்தமாக இருப்பேன் என்று உணர்கிறேன், நம்புகிறேன்" என்ற அவரது கருத்தையும் தெரிவித்திருந்தார்.
6/6

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
Published at : 17 May 2023 03:18 PM (IST)
மேலும் படிக்க





















