மேலும் அறிய

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

டெல்லியில் நிலவும் கடும் மூடுபனியால் அடுத்தடுத்து பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும்  அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து பொதுமக்கள் சுவாசிக்கவே சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு சேர்ந்து கடுமையான பனிப்பொழிவும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைய கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் இரண்டுக்கும் மேற்பட்ட பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா-நொய்டா எக்ஸ்பிரஸ்வே பாதையில் உள்ள மைல்ஸ்டோன் 127 இல் இந்த விபத்து நடந்ததாக மதுரா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக, முகப்பு விளக்குகள் எரியவிட்டபடி சென்றாலுமே எதிரே அல்லது முன்னே செல்லும் வாகனங்களை அடையாளம் காண முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வகையில் தான் விரைவுச் சாலையில் முதலில் மூன்று கார்கள் மோதிக்கொண்டன, அதன் பிறகு ஏழு பேருந்துகள் அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்றாக மோதியுள்ளன. இதில் ஒன்று சாலைப் பேருந்து, மற்ற ஆறும் ஸ்லீப்பர் பேருந்துகள் ஆகும். விபத்துக்குள்ளான அனைத்து பேருந்துகளும் அடுத்த சில நிமிடங்களிலேயே தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளன. 

தகவலறிந்து 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதோடு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.  இந்த விபத்து அப்பகுதியில் நிலவிய அடர்ந்த புகை மூட்டம் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தரபிரதேசம் முழுவதும் பல நகரங்களில் திங்கள்கிழமை காலை காற்றின் தரம் மோசமடைந்ததால் தெரிவுநிலை குறைந்ததால், அடர்த்தியான புகை மூட்டம் நிலவியது.

இதனால், ஆக்ராவில் தாஜ்மஹால் கண்களுக்கு புலப்படாதபடி இருந்தது. மூடுபனி மிகவும் அடர்த்தியாக இருந்ததால், சாலைகளில் வாகனங்கள் கூடப் பார்ப்பது கடினமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

School Student: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
School Student: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
மிஸ் பண்ணிடாதீங்க... TNPSC குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி: தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி அறிவிப்பு
மிஸ் பண்ணிடாதீங்க... TNPSC குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி: தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி அறிவிப்பு
Thanjavur District  Power Shutdown (16.10.26): 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கவனத்திற்கு... நாளை மிக முக்கிய நாள்: என்ன தெரியுங்களா? 
Thanjavur District  Power Shutdown (16.10.26): 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கவனத்திற்கு... நாளை மிக முக்கிய நாள்: என்ன தெரியுங்களா? 
Vellore Power Cut: வேலூரில் நாளை (16-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வேலூரில் நாளை (16-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget