மேலும் அறிய
Adipurush Free Ticket : இலவசம்..இலவசம்..ஆதிபுருஷ் படத்துக்கு 10,000 டிக்கெட் இலவசம் ! எப்படி வாங்கலாம் ?
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்திற்கு 10,000 டிக்கெட்கள் இலவசமாக வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளது

அதிபுருஷ் போஸ்டர்
1/6

இயக்குநர் ஓம் ரவுத் இயக்கத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ள படம் “ஆதிபுருஷ்”.
2/6

இந்த படம் தியேட்டரில் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் களமிறங்கியுள்ளனர்
3/6

ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் ஓம் ரவுத், ஆதிபுருஷ் படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஹனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடமும், விநியோகதஸ்களிடமும் கோரிக்கை விடுத்தார்.
4/6

தற்போது இந்த படத்திற்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
5/6

அதைப்பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்ககுநர் ஓம் ரவுத் ‘ஸ்ரீராமர் மீதுள்ள எனது பக்தியின் காரணமாக, அரசு பள்ளிகள், அனாதை இல்லங்களுக்கு 10,000 டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளேன்’ என அறிவித்துள்ளார்.
6/6

இந்த இலவச டிக்கட்கள் தெலுங்கானாவில் உள்ள அரசு பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட உள்ளது. இதனை தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் பெற முடியாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது
Published at : 08 Jun 2023 01:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement