மேலும் அறிய
Taapsee Pannu Wedding : வெளிநாட்டவரை மணமுடிக்கும் இந்திய நடிகை..டாப்ஸிக்கு விரைவில் டும் டும் டும்?
Taapsee Pannu Wedding : நடிகை டாப்ஸி பன்னு விரைவில் தனது நீண்ட நாள் காதலரான மதியாஸ் போவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

டாப்ஸி பண்ணு
1/6

ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை டாப்ஸி பன்னு, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2/6

நடிகை டாப்ஸி டென்மார்க் பேட்மிண்டன் வீரரான மதியாஸ் போவை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
3/6

இருவரும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
4/6

கடந்த சில நாட்களாக நடிகை டாப்ஸிக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், டாப்ஸியிடம் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
5/6

அதற்கு டாப்ஸி “ நான் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போது விளக்கம் அளித்ததில்லை..அதே போன்று இப்போதும் நான் எதுவும் விளக்கம் அளிக்க போவதில்லை” என்று கூறிவிட்டாராம். டாப்ஸியின் இந்த பதிலால் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.
6/6

டாப்ஸிக்கு திருமணம் நடந்தாலும் அது எளிமையான முறையில் தான் நடக்கும் எனவும் மேலும் 2-3 நாட்கள் இல்லாமல் ஒரே நாள் கொண்டாட்டமாகவே அவர் திருமணம் இருக்கும் என்று டாப்ஸி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Published at : 29 Feb 2024 01:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement