DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
DMK vs Congress: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க புதிய புதிய திருப்பங்கள் நாள் தோறும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லாமல் புதிய அணியை உருவாக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வரலாறு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வை தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பல வருடங்களாக நீடித்து வருகிறது. 2005ஆம் முதல் தொடர்ந்து வந்த கூட்டணியானது 2011ஆம் ஆண்டு இறுதியில் முடிவிற்கு வந்தது. இதனையடுத்து திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக உள்ளாட்சி மன்ற தேர்தல் மற்றும் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. அப்போது இலங்கை தமிழர் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் திமுக- காங்கிரஸ் மீதான கடும் அதிருப்தியால் அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.
தோல்வி மேல் தோல்வியை சந்தித்த காங்கிரஸ்
இதனை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் 41 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டது தான் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கியது. இதன் காரணமாக தேனியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி- காங் நிபந்தனை
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி மேல் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நிலையில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ், இந்த முறை தமிழகத்தில் என்ன செய்ய போகிறது என எதிர்பார்க்க அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், திடீரென கூட்டணி ஆட்சி, கூடுதல் தொகுதி என நிபந்தனையை விதிக்க தொடங்கியுள்ளது காங்கிரஸ். இதனால் திமுக தலைமை காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பு நிர்வாகிகள் தவெகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
எனவே இந்த டிமாண்டை வைத்து திமுகவை மிரட்ட தொடங்கியுள்ளது. இதனால் திமுகவோ வேறு ஒரு பிளானை யோசிக்க தொடங்கியுள்ளது. இதன் படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றால் 25 முதல் 30 தொகுதி வரை கொடுக்க வேண்டிய நிலை வரும். மேலும் அந்த கட்சிக்காக சேர்த்தும் திமுக நிர்வாகிகள் தேர்தலில் உழைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த தொகுதியில் திமுகவினருக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணியை பலப்படுத்தும் வகையில் தேமுதிகவையும், பாமகவின் ராமதாஸ் அணியையும் திமுக கூட்டணியில் இணைக்க காய் நகர்த்தி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
புதிய கூட்டணிக்கு பிளான் போடும் ஸ்டாலின்
மேலும் ஓ.பன்னீர் செல்வமும் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு செல்லவே பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் திமுக பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப ஓபிஎஸ்யின் நம்பிக்கைக்குரிய நபரான வைத்தியலிங்கமும் இந்த முறை தேர்தலில் தான் போட்டியிடவில்லை, தனது மகனுக்கு ஒரத்தநாடு தொகுதியை ஒதுக்கும் படி திமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி இல்லாத நிலையில் புதிய கூட்டணியை உருவாக்கும் வகையில் திமுக செம பிளானோடு களம் இறங்கியுள்ளது.





















