மேலும் அறிய
Shraddha Srinath Photos: நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே.. மாடர்ன் உடையில் உருக வைக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோஸ்!
விக்ரம் வேதா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில், அதிகம் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

ஷ்ரத்தா ஸ்ரீநாத் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்
1/7

பெங்களூரை சேர்ந்த நடிகை ஷ்ரத்தா ஒரு வழக்கறிஞர் ஆவார். பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், கோஹினூர் என்கிற மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
2/7

இதன் பின்னர் 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் யூ -டர்ன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டை பெற்றதால், அடுத்தடுத்து சில கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
3/7

தமிழில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் மணிரத்னத்தை தான் சேரும். 2017-ஆம் ஆண்டு கார்த்தி - அதிதி ராவ் நடித்த 'காற்று வெளியிடை' படத்தில் ஒரு குட்டி ரோலில் நடித்திருந்தார்.
4/7

அதே ஆண்டு நடிகர் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இவன் தந்திரன் படத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக அறிமுகமானார்.
5/7

ஆனால் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது, புஷ்கர் - காயத்திரி இயக்கத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் தான்.
6/7

கடந்த 2022-ஆம் ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான இறுக்கப்பற்று திரைப்படமும், இவருடைய நடிப்புக்கு பாராட்டுகளை பெற்று தந்தது.
7/7

தற்போது தென்னிந்திய மொழிகளை கடந்து, பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வரும் ஷ்ரத்தா அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பச்சை நிற மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Published at : 26 Nov 2024 11:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion