மேலும் அறிய
1000 Crore Club Movies : தங்கல் முதல் ஜவான் வரை.. 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இந்திய திரைப்படங்கள்!
1000 Crore Club Movies : 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களை பற்றி இங்கு காணலாம்.
![1000 Crore Club Movies : 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களை பற்றி இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/e3d050899f116458e7521ce4796edca01695638632664572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1000 கோடி கிளப் திரைப்படங்கள்
1/6
![தங்கல் : அமீர் கான், ஃபாத்திமா சனா, சான்யா மல்ஹோத்ரா, ஷாக்ஷி தன்வர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான தங்கல் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. மல்யுத்த போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், வரலாறு காணாத வகையில் இதுவரை 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, சாதனை படைத்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/a3c6867e6305c5edd0504635a6a0eb5ff576b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கல் : அமீர் கான், ஃபாத்திமா சனா, சான்யா மல்ஹோத்ரா, ஷாக்ஷி தன்வர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான தங்கல் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. மல்யுத்த போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், வரலாறு காணாத வகையில் இதுவரை 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, சாதனை படைத்தது.
2/6
![பாகுபலி 2 : ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் ஆகியோர் நடித்த பாகுபலி 2 படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. கட்டப்பா, ஏன் பாகுபலியை கொன்றான் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்த இந்த இரண்டாம் பாகம் 1000 கோடி ரூபாயை வசூல் செய்த இரண்டாவது இந்திய படமாகும். அத்துடன் மலை போன்ற வசூலை குவித்த முதல் தென்னிந்திய படமும் இதுவே. வெறும் 10 நாட்களில், 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/4a6a8a6713e7e0c5e580447e29baac92732e1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாகுபலி 2 : ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் ஆகியோர் நடித்த பாகுபலி 2 படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. கட்டப்பா, ஏன் பாகுபலியை கொன்றான் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்த இந்த இரண்டாம் பாகம் 1000 கோடி ரூபாயை வசூல் செய்த இரண்டாவது இந்திய படமாகும். அத்துடன் மலை போன்ற வசூலை குவித்த முதல் தென்னிந்திய படமும் இதுவே. வெறும் 10 நாட்களில், 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.
3/6
![ஆர்.ஆர்.ஆர் : ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி, மீண்டும் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி. 1000 கோடி க்ளப்பில் இணைய 16 நாட்கள் மட்டுமே ஆனது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/919d74d5c786f971986d083be3374e8413f78.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர்.ஆர்.ஆர் : ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி, மீண்டும் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி. 1000 கோடி க்ளப்பில் இணைய 16 நாட்கள் மட்டுமே ஆனது.
4/6
![கே.ஜி.எஃப் 2 : மாலிவுட், கோலிவுட், டாலிவுட் ஆகிய சினிமாத்துறைகள் தரமான படங்களை கொடுத்து வர, கன்னட சினிமா மட்டும் கவனத்தை பெறாமல் இருந்தது. அந்த சங்கடத்தை போக்கும் வகையில் நீல் பிரசாந்த் இயக்கிய கே.ஜி.எஃப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தை தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகம், 1000 கோடி ரூபாய் வசூலை பெற்றது. 16 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/a98cb3edeb6cc46912a05e7912c3e7589dcdb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கே.ஜி.எஃப் 2 : மாலிவுட், கோலிவுட், டாலிவுட் ஆகிய சினிமாத்துறைகள் தரமான படங்களை கொடுத்து வர, கன்னட சினிமா மட்டும் கவனத்தை பெறாமல் இருந்தது. அந்த சங்கடத்தை போக்கும் வகையில் நீல் பிரசாந்த் இயக்கிய கே.ஜி.எஃப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தை தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகம், 1000 கோடி ரூபாய் வசூலை பெற்றது. 16 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.
5/6
![பதான் : தங்கலுக்கு பின், பாலிவுட்டில் எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூலை பெறாமல் இருக்க, ஹிந்தி சினிமா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அதற்கு பதான் படம் தீர்வாக அமைந்தது. 27 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/1f774afbe7bd666c1913eed16e9b0758fea6e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பதான் : தங்கலுக்கு பின், பாலிவுட்டில் எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூலை பெறாமல் இருக்க, ஹிந்தி சினிமா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அதற்கு பதான் படம் தீர்வாக அமைந்தது. 27 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை பெற்றது.
6/6
![ஜவான் : பாலிவுட்டில் கால் தடம் பதித்த அட்லீ, தனது முதல் படத்திலேயே 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிவிட்டார். இது 18 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. ஷாருக்கான் இரண்டாவது முறையாக இந்த பெரும் சாதனையை படைத்துள்ளார். இதில் நயன், விஜய் சேதுபதி நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/00cb4e9ae6f9315ce24d0662dc36a18b53d64.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜவான் : பாலிவுட்டில் கால் தடம் பதித்த அட்லீ, தனது முதல் படத்திலேயே 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிவிட்டார். இது 18 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. ஷாருக்கான் இரண்டாவது முறையாக இந்த பெரும் சாதனையை படைத்துள்ளார். இதில் நயன், விஜய் சேதுபதி நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 25 Sep 2023 04:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion