Breaking News Tamil LIVE: ராசிபுரத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவிப்பு
இன்றளவும் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் ஓமிக்ரான் வகை கொரோனா குறிப்பாக BA4 மற்றும் BA வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது.
LIVE
Background
உலகளவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக உலகமே சிக்கித்தவித்து கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கியிருக்கிறது. இந்த 2 ஆண்டுக் காலக்கட்டத்தில் நாம் சந்தித்த இழப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. பொருளாதார, மனித இழப்புகள் என இந்த பேரிடர் மனித குலத்திற்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது.
கொரோனா முதல் அலையின் அச்சம் மற்றும் விழிப்புணர்வு காரணமாக இரண்டாம் அலையில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் மாஸ்க் அணிவது அவசியம் என உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய,மாநில சுகாதாரத்துறை வலியிறுத்தியதால் அதனை உணர்ந்து நாம் அனைவரும் இன்றளவும் மாஸ்க் பயன்பாட்டை பின்பற்றி வருகிறோம். அதேபோல் கொரோனாவுக்கு தடுப்பூசி போட தயங்கிய மக்கள் அதன்பின் இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி நோயிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள தொடங்கினர்.
இதனிடையே உருமாற்றம் அடைந்த கொரோனா தொடர்ந்து கண்டறியப்பட்டாலும் அது முந்தைய அளவைப் போல பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இதனை சமாளிக்க இன்றளவும் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் ஓமிக்ரான் வகை கொரோனா குறிப்பாக BA4 மற்றும் BA வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக மாறியுள்ளது.
அதன்படி இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54.01 கோடியாக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் 63.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் 51.27 கோடி போர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 39,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் வடகொரியாவில் 42,810, ஜெர்மனியில் 44,642, பிரேசிலில் 32,332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு- விசாரணை நடத்த முடிவு
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல். இவரது மரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
அரசு, தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை!
பள்ளிகளில் புதிதாக சேர வரும் 8-ஆம் வகுப்பு மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாற்றுச்சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது என்று பள்ளி கல்வித் துறை வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 5,8, 10, மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாமதமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை வலியுறுத்து உள்ளது.
கூட்டுறவு - உணவு - நுகர்வோர் துறை முதன்மைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு - உணவு - நுகர்வோர் துறை முதன்மை செயலாளராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
ராசிபுரத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவிப்பு
ராசிபுரத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராசிபுரத்தில் பணியின் போது உயிரிழந்த துணிச்சலான காவலர்கள் திரு.சந்திரசேகர் மற்றும் திரு.தேவராஜன் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மாண்புமிகு ஆளுநர்,
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) June 12, 2022
திரு. ஆர்.என்.ரவி, அவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.