உலகளவில் 13.24 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளான 13.24 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US: 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்  15 கோடியே 49 லட்சத்து 68 ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 15 கோடியே 49 லட்சத்து 68 ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 40 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது.உலகளவில் 13.24 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 554 ஆக உள்ளது. ஒரு கோடியே 91 லட்சத்து 94 ஆயிரத்து 803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 54 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 41 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 848 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3 கோடியே 32 லட்சத்து 74 ஆயிரத்து 278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 92 ஆயிரத்து 404 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் ஒரே நாளில் 69 ஆயிரத்து 378  பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 48 லட்சத்து 60 ஆயிரத்து 812  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 11 ஆயிரத்து 854 யை கடந்துள்ளது.
 
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.உலகளவில் 13.24 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604-இல் இருந்து இரண்டு கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833- ஆக அதிகரித்தது. ஒரே நாளில் கொரோனாவுக்கு மூவாயிரத்து 449 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 959-ல் இருந்து இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 408-ஆக உயர்ந்தது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 289 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 62 லட்சத்து 93 ஆயிரத்து 003-இல் இருந்து ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உள்ளது.

Tags: india America wolrd corona update brazil

தொடர்புடைய செய்திகள்

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!