மேலும் அறிய

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர்.. என்ன பேசினார்?… முழு தகவல் இங்கே!

உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா அளித்த ஆதரவிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு விளாடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு பின்னணியில் உக்ரைன்-இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடல் குறித்து ஜெலென்ஸ்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

உக்ரைன்-இந்தியா உறவு

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். உரையாடலின் போது, ​​உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னணியில் உக்ரைன்-இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். உக்ரைனில் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யாவால் வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரேனிய பிரதேசங்களை சட்டவிரோதமாக இணைக்கும் முயற்சியை இலக்காகக் கொண்ட அனைத்து ஆக்கிரமிப்பாளர்களின் திட்டங்கள் பலிக்காது என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர்.. என்ன பேசினார்?… முழு தகவல் இங்கே!

ரஷ்யா பேச்சுவார்த்தையை விரும்பவில்லை

இந்த நிலையில், ரஷ்ய கூட்டமைப்பின் தற்போதைய தலைவருடன் உக்ரைன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தாது என்று விளாடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். மேலும் எங்கள் அரசு எப்போதும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை எட்ட நினைக்கிறது. ஆனால், ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பவில்லை. ஐ.நா. பொதுச் சபையின் அமர்வில் எனது உரையின் போது, ​​அமைதிக்கான எங்கள் தெளிவான சூத்திரத்தை நான் கோடிட்டுக் காட்டினேன் என்று உக்ரைன் ஜனாதிபதி மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

இந்தியாவுக்கு நன்றி

உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா அளித்த ஆதரவிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு விளாடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார், மேலும் இது போருக்கான நேரம் அல்ல என்று அவர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். உக்ரைனுக்கு இந்திய அரசும் தனியார் துறையும் வழங்கிய குறிப்பிடத்தக்க மனிதாபிமான உதவிகளை ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார். மேலும் விளாடிமிர் ஜெலென்ஸ்கியும் நரேந்திர மோடியும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து தனித்தனியாக விவாதித்தனர்.

உக்ரைனுக்கு அழைப்பு

உலகின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பவராக நமது அரசு தொடர்ந்து செயல்படத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வலியுறுத்தினார். இது தொடர்பாக, ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளின் ஆதரவும், முக்கியமாக இதியாவின் ஆதரவும் மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார். "ரஷ்யாவின் அணுசக்தி அச்சுறுத்தல், குறிப்பாக Zaporizhzhia NPP தொடர்பாக, உக்ரைனுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். தனித்தனியாக, உக்ரைன் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். உரையாடலின் போது, ​​வழக்கமான முழு அளவிலான உக்ரேனிய-இந்திய தொடர்புகளை ஆழப்படுத்துவதில் பரஸ்பர ஆர்வத்தை இருதரப்பும் குறிப்பிட்டன. இறுதியாக உக்ரைனுக்கு வருமாறு மோடியை ஜெலென்ஸ்கி அழைத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
Trump warns Iran: ஈரானுக்குப் புதிய
Trump warns Iran: ஈரானுக்குப் புதிய "டெட்லைன்" ஹார்மூஸை திறந்தா நல்லது இல்லாட்டி.. ஈரானை மீண்டும் மிரட்டும் டிரம்ப்
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
Iran Warns Trump: ”மேல கைய வெச்ச, மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்” - ட்ரம்பை எச்சரித்த ஈரான்
Iran Warns Trump: ”மேல கைய வெச்ச, மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்” - ட்ரம்பை எச்சரித்த ஈரான்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
CSK Vs RCB: 7 மேட்ச்சா தோல்வி மட்டுமே..! குப்ப பவுலிங் - ருதுராஜை கிழித்து தொங்க விடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!
CSK Vs RCB: 7 மேட்ச்சா தோல்வி மட்டுமே..! குப்ப பவுலிங் - ருதுராஜை கிழித்து தொங்க விடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?

Embed widget