மேலும் அறிய

TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?

TVK Vijay Campaign: சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் நாளை வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே பரப்புரை அனல்பறக்கும். இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த பரபரப்பிற்கு முக்கிய காரணமாக  உருவெடுத்திருப்பவர் விஜய்.

விஜய் நாளை பரப்புரை:

முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. விஜய், செங்கோட்டையன் தவிர மிகப்பெரிய முகங்கள் அந்த கட்சியில் இல்லாவிட்டாலும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது, அவரது வில்லிவாக்கம் பரப்புரை ரத்தானது. இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆதரவாக விஜய் நாளை மீண்டும் பரப்புரையில் ஈடுபட உள்ளார். தற்போது வில்லிவாக்கம் தொகுதிக்கான பரப்புரைக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.

18 நாட்கள்:

மேலும், அண்ணாநகர், விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் தொகுதியில் விஜய் பரப்புரையில் ஈடுபட காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்த தாெகுதிகளிலும் பரப்புரையில் ஈடுபட அனுமதி கிடைத்தால் விஜய் அங்கு பரப்புரையில் ஈடுபடுவார். வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், விஜய் அடுத்தடுத்த நாட்களில் தனது பரப்புரையை மேலும் தீவிரப்படுத்த உள்ளார். தென் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அவர் தனது பரப்புரையை வலுப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வலுவாக உள்ள  பகுதிகளில் அவர் தனது பரப்புரையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு:

விஜய்யின் பரப்புரையின்போது போதியளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவெக-வினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால், அவருக்கு பரப்புரையின்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், விஜய் பரப்புரையின்போது அவரைப் பார்க்க தவெக-வினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் அதிகளவு கூடுவதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பவும் காவல்துறை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விஜய் மட்டுமின்றி முதன்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ள தவெக-வினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் மட்டுமின்றி மற்ற அரசியல் தலைவர்களான மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், சீமான் மற்றும் முக்கிய கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Embed widget