மேலும் அறிய

TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் போட்டியில் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளின் பட்டியலை தவெக-வே வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியிருக்கும் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

குற்ற விவரங்களை வெளியிட்ட தவெக:

மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய்யின் இந்த முதல் அரசியல் போட்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மீதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனுத் தாக்கலின்போது தங்களுடைய சொத்து மதிப்புகளுடன், தங்கள் மீதான குற்ற வழக்குகள் பற்றிய முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. 

இந்த சூழலில், தவெக சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளின் முழு விவரத்தையும் தவெக கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியே தனது வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளின் முழு பட்டியலையும் வெளியிடுவது இதுவே முதன்முறை ஆகும். 

மற்ற கட்சியினர் வெளியிடுமா?

தங்களது வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குளை அரசியல் கட்சி ஒன்றே தாமாக வந்து வெளியிட்டிருக்கும் இந்த தவெக-வின் செயல்பாட்டிற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தவெக போல தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தவெக பலமிகுந்த திமுக கூட்டணி, பலமிகுந்த அதிமுக கூட்டணி, தனி வாக்கு வங்கி கொண்டுள்ள நாம் தமிழர் ஆகியோரை எதிர்த்து களமிறங்குகிறது. இதனால், ஒவ்வொரு தொகுதியிலும் நாளுக்கு நாள் தவெக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இணையத்தில் தீ, களத்தில் அமைதி:

இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் தவெக-வினர் பிற கட்சியினர் மீதான குற்றச்சாட்டுக்கள், பிற கட்சியினருக்கு எதிரான பரப்புரையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதேசமயம், தமிழ்நாட்டில் களத்தில் அவர்களது பரப்புரை மிகவும் தொய்வாகவே இருப்பதாக கருதப்படுகிறது. விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கே அவர்களது பலமாக இருக்கும் சூழலில், திமுக மற்றும் அதிமுக அளவிற்கு அவர்களுக்கு பூத் கமிட்டி கட்டமைப்பு இன்னும் சில இடங்களில் இல்லாதது பலவீனமாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget