மேலும் அறிய

Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்

Trump Iran War: இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலைக்குள் ஹார்மஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், ஈரானின் எல்லாமே அழித்தொழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Trump Iran War: அமெரிக்க நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 8 மணிக்குள் சர்வதே வணிகத்திற்காக, ஹார்மஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்.

சரியா 8 மணி - நேரம் குறித்த ட்ரம்ப்

குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானை துடைத்து எறிவதற்கான தீவிரமான ராணுவ நடவடிக்கை தொடரப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், ஈரானின் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, எண்ணெய் வளங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி” என குறிப்பிட்டுள்ளார். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலையில் அடுத்த கட்ட தீவிர ராணுவ நடவடிக்கைக்கான எச்சரிக்கையாக கருதப்படுகிறது. முன்னதாக 48 மணி நேரத்தில் சர்வதேச வணிகத்திற்காக ஹார்மஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகள் போன்றவை தகர்த்தெறியப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்களை வழங்கினோம்..

ஈரான் வேகமாக ஒப்பந்தங்களுக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால், தீவிரமான ராணுவ நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்கட்சிக்கு அளித்த பேட்டியில், “வேகமான அவர்கள் ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால், ஈரானின் எல்லாவற்றையும் வெடிக்கச் செய்து எண்ணெய் வளங்களை கையிலெடுத்துக்கொள்வேன். மேம்பாலங்கள், ஆற்றல் நிலையங்கள் ஆகியவை நாடு முழுவதும் குறிவைக்கப்படும். முன்னதாக ஆண்டின் தொடக்கத்தில் ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களுக்கு குர்திஷ் சமூகத்திற்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது” என ட்ரம்ப் பேசியுள்ளார். கடும் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என ஈரான் மறுத்து வந்தாலுமே, அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள நல்ல வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரான் சொல்வது என்ன?

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்டளைப்படி டிரம்ப் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வளைகுடா பகுதியை வாஷிங்டன் ஒரு பெரும் பேரழிவை நோக்கி இழுத்துச் செல்வதாகவும் எச்சரித்துள்ளார். ட்ரம்ப் விடுக்கும் அச்சுறுத்தல்கள் ஈரானை நிர்ப்பந்திக்காது என்றும், அமெரிக்காவின் நிலைப்பாடு சர்வதேச சட்ட மீறல் என்றும் காலிபாஃப் எச்சரித்துள்ளார். ஈரானின் முக்கிய கூட்டாளியான ரஷ்யா, இறுதி எச்சரிக்கைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

தெற்குக் கடற்கரையில் உள்ள புஷேர் அணுமின் நிலையம் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், கதிரியக்க கசிவுக்கு வழிவகுத்து, ஈரான் மக்களுக்கு அல்ல, வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (GCC) தலைநகரங்களில் உயிர்களுக்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். புஷேர், ஈரானியத் தலைநகரை விட குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு நெருக்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
“உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
US IRAN War: பெரிய பிரச்னை ஆகிடும்..! ஈரானுக்கு ஆதரவாக வந்த சீனாவிற்கு ட்ரம்ப் மிரட்டல், 15 மணி நேரம்..
US IRAN War: பெரிய பிரச்னை ஆகிடும்..! ஈரானுக்கு ஆதரவாக வந்த சீனாவிற்கு ட்ரம்ப் மிரட்டல், 15 மணி நேரம்..
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
“உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
TN Election 2026: சென்னையில் இலைக்கு மாறும் 4 தொகுதிகள் - கோவையில் சூரியன் உதிக்கும் தொகுதிகள் - TVK-வால் ஷாக்
TN Election 2026: சென்னையில் இலைக்கு மாறும் 4 தொகுதிகள் - கோவையில் சூரியன் உதிக்கும் தொகுதிகள் - TVK-வால் ஷாக்
Embed widget