(Source: ECI/ABP News/ABP Majha)
Delmicron Variant: உலகை அச்சுறுத்த வரும் டெல்மிக்ரான் - விஞ்ஞானிகள் கவலை
சார்ஸ்- கோவ் 19 ஆர்என்ஏ மரபியல் பொருட்களை கொண்டது. பொதுவாக, இவற்றின் மரபியல் பொருள் விரைவாகவும் அதிகமாகவும் மாற்றம் அடைந்துக் கொண்டேயிருக்கும்
ஒமிக்ரான் தாக்கங்களே இன்னும் ஓயாத நிலையில், சார்ஸ் – கோவ்-2-வின் புதிய வகை உருமாறிய டெல்மிக்ரான் தொற்று மேற்கத்திய நாடுகளை அச்சறுத்த தொடங்கியுள்ளது. கடந்த வாரங்களில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் அதிக அளவிலான புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், கொரோனா நோய்த் தொற்றால் 270,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய தினசரி பாதிப்பாகும். அதே போன்று, இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122,186 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்நாட்டின் அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். இந்த உலகம் நான்காவது கொரோனா பெருந்தொற்று அலையை சந்தித்து வருவதாக ஆய்வாளார்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த, சமீபத்திய உயர்வுக்குப் பின்னால், புதிய உருமாறிய டெல்மிக்ரான் தொற்றின் தாக்கம் இருக்கக் கூடும் என்று ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா உருமாற்றம் என்றால் என்ன?
2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட, சார்ஸ் கோவ் - 19( சார்ஸ் கோவ் - 19 என்பது வைரஸின் பெயர், கொரோனா வைரஸ் என்பது தொற்றின் பெயர் ) மரபணு அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களால் வைரஸில் இருந்து உருமாறிய கொரோனா வகை தோன்றுகிறது. சார்ஸ்- கோவ் 19 ஆர்என்ஏ மரபியல் பொருட்களை கொண்டது. பொதுவாக, இவற்றின் மரபியல் பொருள் விரைவாகவும் அதிகமாகவும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கும். உண்மையில், ஆர்என்ஏ மரபியல் வைரஸ்களை வகைப்படுவதுத்துவது கூடி மிகவும் கடினமாகும்.
பலதரப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் தற்போது பரவிக்கொண்டிருக்கின்றன.
இவற்றில், இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta), பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617.2- டெல்டா வகை), தென்னாபிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் (B.1.1.529 ) ஆகிய ஐந்து மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள T478K, P681R and L452R மாற்றங்கள் டெல்டா வகையாகும். டெல்டா உருமாறிய கொரோனா வைரஸ் மரபணு அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களால் 'டெல்டா பிளஸ் வகை வைரஸ் உருவானது. கோவ் - 19 வைரஸின் ஸ்பைக் புரததத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக ஒமிக்ரான் உள்ளது.
டெல்மிக்ரான் என்றால் என்ன?
டெல்மிக்ரான் என்பது புதிய உருமாறிய கொரோனா இல்லை என்று ஆய்வாளார்கள் மதிப்பிட்டுள்ளனர். டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகையின் கலப்பிடமாக இது உள்ளது. இந்த டெல்மிக்ரான் அதிகம் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த டெல்மிக்ரான் சார்ஸ் - கோவ்- 19 வைரஸில் இருந்து முற்றிலும் மாறுபடாது என்பதால், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்